பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


நம்ப வீரமணி அண்ணன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அவர் சொல்லுகிற வழியிலே நடக்க வேண்டியது தான் நம்ப கடமை, என்று குழை யப் பேசித் தழையச் சிரித்தான் மாணிக்கம். :

மற்றவர்கள் ஊம் கொட்டினர்கள்.

அன்பும் பாசமும் பேணி, அமைதியோடு வீரமணி புன்னகை ஏந்தினன்.

அவர்கள் இனிமேல் கிளம்பி விடுவார்கள். ஆளுல் ...

அப்போது, புதிய வாடை அலேந்து வந்தது. வாடையென்ருல் கெட்ட வாடை !

ஒய்யாரக் கொண்டையும் தாழம் பூவுமாக, நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு, ஒருத்தி உள்ளே நுழைந்தாள். அந்தச் சிங்காரிக்குப் பெயர் இல்லா மல் இருக்கலாமோ?-ஊகூம், கூடாது! கூடவே கூடாது! அவள்: செங்கமலம்.

சூடான பரபரப்பு சூடேறியது; சூடேற்றியது.

கூடியிருந்தவர்கள், அவரவர் மனுேபாவனைப் பிரகாரம் உத்தி செய்து, அந்தக் கனி'யைக் கள்ளத் தனம் பாய்ச்சிப் பார்வையிடத் தொடங்கினர்கள். கனி எனில், கல்லெறிக்குத் தப்புமா?

வீரமணிக்கோ எரிச்சல் பற்றி எரிந்தது. பை யிலிருந்து பத்திரிகையை எடுத்துப் புரட்டினன்.

அவன் வாய் துறு துறு'த்துக் கொண்டிருந்தது. செங்கமலம் ஆடும் கூத்து எங்கே போய், எப்படி