பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205

305

கேட்டுக் கொண்டே, நழுவி விழுந்திருந்த வைரச் சிமிக்கிகளைக் கையிலே எடுத்தார் அவர்.

வீரமணிக்கு வேர்த்துக் க்ொட்டிக் கொண் டிருந்தது. அப்பா எப்படியெல்லாம் கொதித்துக் கொதிப்படையப் போகின்ருரோ? ஆமாங்க. இந்த ஜோடி வைரச் சிமிக்கிகளுக்காகத்தான் அம்மான் ஆலாய்ப் பறந்து வந்தாருங்க. வீட்டுக்கு வெளியிலே நீங்க கேட்ட கேள்விக்கு வீட்டுக்கு உள்ளே பதில் சொல்வி, இந்தச் சிமிக்கிகளைக் கையில் எடுத்துக் காட்டி உண்மையைப் புட்டு வச்சுச் சொல்லிப்புட வேணும்னு யோசனை பண்ணி யிருந்தேனுங்க, அப்பா!' என்று சமாதானம் சொன்னன் அவன்.

வைரச் சிமிக்கிகள் இரண்டும் வைரம் காட்டி வைரம் கட்டிச் சிரித்திருக்க வேண்டும்! -

அதே தருணத்தில், முதியவர் ஆதிமூலத்தேவர் காணுததைக் கண்ட பாங்கிலே கடகடவென்று சிரிக்கலானர். டேய் தம்பி, ஆத்தா மகமாயி நியாயத்துக்குப் பரிஞ்சு பேசக் கடமைப்பட்டவள் என்கிற விசயம் இப்பவாச்சும் உனக்குப் புரியுதாப்பா என்று கேட்டார்.

தந்தையின் அடியும் முடியும் இல்லாத பேச்சு புரியாத புதிர் போலப் பட்டது.

“என்ன சொல்லுறிங்க, அப்பா? தெய்வம்னு சொன்னல், அது நியாயத்தின் அடையாளம்னு தானே அர்த்தம்?' என்று இளகிய தொனியில் பேசினன் வீரமணி.