பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

لا تقر

முடியப் போகிறதென்று வேடிக்கை பார்க்க வேண் டாமா?-எடுப்பார் கைப் பிள்ளை ஆயிற்று பொறுமை.

செங்கமலம் யாரையும் லட்சியம் செய்தவளா கத் தெரியவில்லை. யாருக்காகவும் வெட்கப்படுபவ ளாகவும் தென்படவில்லை. சுடுதண்ணி வேணும்; நல்ல தாய்ப் போட்டுக்கொடுக்க வேணும்!' என்று அதிகாரமாகச் சொன்னுள், அவள். இரட்டை வடத் தென்னம்பாளைச் சங்கிலி மின்னமல் இருக்காது.

ஞானசீலன் முகத்தைச் சுளித்தபடி, அந்த ஒய்யாரியை அருவருப்போடு நோக்கினர்; பிறகு பார்வையின் வேண்டா வெறுப்புத் தன்மையை மாற்றிக்கொண்டு, ஒர் அச்ச உணர்வோடு. வீரமணியை அளந்தார். வீரமணியின் உருவம் அவருக்கு ரத்த தானம் வழங்கியிருக்குமோ? ஆவேசத்துடன் எழும்பினர். எலே செங்கமலம், என் கடையிலே இனி உனக்குச் சுடுதண்ணியும் கிடைக்காது; சுடாத தண்ணியும் கிடைக்காது! கைக்கு மெய்யாய் முதலிலே நீ இந்த இடத்தைக் காலி பண்ணிடு!" என்று ஆணையிட்டார்.

செங்கமலமா மான அவமானத்துக்கு எல்லாம் அஞ்சுபவள்? -மூச்! மறு பேச்சாடவில்லை; ‘சுருட்டை நோய் பீடித்த நெல் வயலுக்கு நேராக தலையை மட்டிலும் தொங்கப் போட்டவளாக, அங்கிருந்து நழுவி விட்டர்ள். செங்கமலமா இல்லை, கொக்கா? * *