பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

13. பெண்மை இனிக்குதடா

பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்!

அந்தப் புண்ணியத்தின் தரிசனம் அன்னக் கொடியின் மெளனப் புன்னகையில் வீரமணிக்குக் கிட்டியது. முதுமொழியின் இளம் ரத்தம் அப்போது அவனுக்கு ரத்ததானம் வழங்கியிருக்கத்தான் வேண்டும். இல்லையெனில், அவன் அவ்வாறு மனம் விட்டு - வாய்விட்டுச் சிரித்திருக்க மாட்டான்!'அம்மான் மகளே! ...வா, வா!' என்று காதலாகிக் கனிவுடன் முகமன் மொழிந்தான், உள்ளங்கையில் நெல்லிக்கனியென மின்னிப் பளிச்சிட்ட அந்த வைரச் சிமிக்கிகளின் தரிசனம் அவனை அப்பொழுது நிலை குலையச் செய்தது என்னவோ உண்மைதான். என்ருலும், எல்லாச் சங்கடத்தையும் கடந்தும் கடத்தியும் அவன் சிரித்தான்.

பெரியவர் ஆதிமூலத்தேவர் சிமிக்கிகளைப் பறி கொடுத்த மனச்சலனத்தோடு கைகளைப் பிசைந்த வராக ஏக்கமும் துக்கமும்புடை சூழ-படை சூழ நின்ருர், வேர்வை வழி தேடி வழிந்து ஓடியது. கட்டுக் கலந்த கட்டுக் குடுமியைத் தட்டிச் சேர்த்து முடிந்து கொள்ளக் கூட நினைவிழந்து தவித்தார் அவர். கொண்ட வைராக்கியத்தைக் கொண்டு செலுத்தத் தீட்டியிருந்த திட்டத்தில் பெற்றமகனே பிடிமண்ணைப் பிடித்துப் போட்டு விட்டான்ே என்ற மனத்தாங்கலோடு, பூசை வேளையில் புகுந்த அன்னக்கொடியின் தோற்றமும் அ வரை த்