பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219

3 is

முன்கூடத்தில் கையில் எதையோ பிரித்து வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள் அன்னக் கொடி. தோள்பட்டையிலிருந்து புடவை சரிந்து விழும் அளவுக்கு அவள் மனம் தடுமாறி விடவில்.ை முதற் குரலைக் காதில் வாங்கிக் கொண்டதாகத் தோன்றவில்லை அன்னம்,

வீரமணி மறுபடி விளித்தான். “என்னங்க, அத்தான்?' என்று கேட்டாள். 'மாமாவுக்கு நெஞ்சடிைப்பு சரியாயிடுச்சுங்களா?” என்று தொடர்ந்தாள்.

"ஆமா, சரியாயிடுச்சு. அப்பாவுக்கு என்ன வெல்லாமோ புதுசு புதுசாய் வியாதிகள் தாக்குது!” 'எல்லாம் சரியாகிப் போயிடுமுங்க, அத்தான் என் கையினலே நாலு வேளை சோறு ஆக்கிப் போட் டேன்ன, எல்லாச் சீக்கும் கடலே கதின்னு ஓடிப் போயிடாதுங்களா?”

'ஒகோ!' வீரமணி கம்பீரமான தன்னம்பிக்கையின் கம்பியில் நின்று ஊசலாடினன். நல்ல சிரிப்பும் பீறிட்டது. பெண்மை இப்போதும்தான் இனிக் கிறது! பேஷ்!...

நான் புறப்படுகிறேன். அப்பாவுக்குப் பசி தாங்காது. போகட்டுமா?"

'போயிட்டு வரட்டுமான்னு கேள், அன்னம்! ... இரு; ஒரு நிமிஷம் நில்லு, அம்மான் மகளே!'