பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227

227

நினைத்து அழவேண்டும் போலவும், எதையோ மறந்து சிரிக்க வேண்டும் போலவும் அவள் நினைத் தாள்.

'அத்தான், நீக்குப் போக்குப் புரியாமல் உருகி உருக்குலைஞ்சு போயிருக்கிற என்னை மந்திரி தந்திரி யாட்டம் கருதி, கருத்துக் கேட்கிறீங்களே? என்ைேட கதையே எனக்குப் பிடிபடலே; என் பாதையே எனக்கு இருட்டிக்கிட்டு வருது. இந்த அவல நிலைமையிலே, நான் என்னத்தைச் சொல் லட்டும்? உங்க அப்பா புதிர்னு நீங்க அடிக்கொரு பயணம் சொல்ல மாட்டீங்களா? அதொப்ப, என் அப்பாவும் ஒரு புதிர்தான்னு நானும் சொல்லித் தான் தப்பிக்க வேண்டியிருக்குது!" என்று கூறி நிறுத்தினுள். -

வீரமணி நெடுமூச்செறிந்தான்.

விதியை வீட்டுக்கு வெளியே இருமுனைகளிலே பிரித்துக் காவல் வைத்து விட்டு, அந்த விதியை வீட்டுக்கு உள்ளே இரு முனைகளில் சோதிக்கத் துணிந்து விட்டவர்கள் மாதிரி, அன்னமும் வீரமணி யும் ஒருவரையொருவர் புதிய பார்வையால் அளந்து கொண்டார்கள்.

அவள் சிரித்தாள், அவன் சிரித்தான்.

அவளது சிரிப்பிலே, அவளது எதிர்காலக் கனவு கள் பிரதி பலித்தன டோலும்! -

அவனுடைய சிரிப்பிலே, சிலட்டுர்க் கங்காணி யின் மகள் பவளக்கொடியும், திட்டிவாசலை ஒட்டிக்