பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

認導ひ

நாணம் காத்தவள் நாணம் காட்டினுள் 'பாவம் செஞ்சிட்டீங்களே, அத்தான்?' என்ருள்,

அன்னக்கொடி.

"ஊகூம்;புண்ணியம் செஞ்சிட்டேன், அம்மான் மகளே!' என்ருன் வீரமணி.

"மெய்யாலுமேதான, அத்தை மகனே?”

'என்னேட மெய் நடுங்குறதிலேயிருந்து அந்த மெய் உனக்குப் பிடிபடலையா, புள்ளே!'

"புள்ளே, புள்ளேன்னு ஒரு அரை நாழிப் பொழுதுக்குள்ளாற எத்தனை கடுத்தம் அழைப்பீங் களrம்?’’

“எத்தனை கடுத்தம் வேணும்னலும் அழைப் பேன்; அழைச்சுக்கிட்டே இருப்பேன். கன்னி கழியாப் பொண்ணை எடுத் த எடுப்பிலே புள்ளேன்னு முறை வச்சுக் கூப்பிடுறதுக்கு நம்ப சாதி முறையிலே கற்பிச்சுக் கொடுத்திருக்கிற தனி அர்த்தம் இன்னமுமா உனக்கு ஞாபகத்துக்கு வந்து குதிக்கலே, அன்னம்?'

அன்னக்கொடியின் நனினம் நிரம்பிய நாணம் கண் கலங்கியது. விலக முயன்றவள், விலகாமலே கின்று கொண்டிருந்தாள். இம்மாம் தொகூ வுக்கு என் மேலே பாசமும்.நேசமும், பாந்தமும் பந்தமும், ஆசையும் அன்பும் கொண்டிருக்கிற நீங்கதான சிலட்டுர்ப் பவளக்கொடியைக் கண்ணுலம் கட்டிக் கிட ஒப்புதல் கொடுத்தீங்க, மச்சான்?...' என்ருள்.