பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

器器岑

அவரவர் கையில் மின்னிப் பளிச்சிட்ட வைரச் சிமிக்கியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க வும் அவர்கள் மறந்துவிடக் காணுேம்.

கூத்தை ரசிக்கும் ஆர்வத்துடன் அன்னக்கொடி யும் வீரமணியும் புதிய சுதாரிப்புடன் தங்களைத் தயார் செய்து கொண்டவாறு, ஒருவரோ டொருவர் உரசிக் கொண்டே புழக்கடை மண்ணில் கால் பாவி நடக்கத் தொடங்கினர்கள்.

ஆதிமூலத் தேவர் தலைமுடிகளைத் தட்டி முடிந்து கொண்டே பெரிதாக ஒரு கனைப்புக் கனைத் துக் கொண்டார்.

ராமையாத் தேவர் கிராப்புத் தலையை வருடிக் கொண்டே சிறிதாக ஒரு பெருமூச்சை நெட்டித் தள்ளினர். اً . . ..,ا

"மச்சான்காரரே! மண்ணிலே நிலை குப்புற -விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டலேன்னு சில புறக்குடிப் படைகள் பேசுவாங்களாம்! ஆன, நீங்க உயர்ந்த புள்ளி. ஊர்க் கார்வாருக்கு உரிய ஆம்பளை. என்ருலும், எனக்குச் சொந்தமான வைரச் சிமிக்கியைச் சந்தடி சாக்கிலே நீங்க லவட்டி எடுத்து வெளிச்சத்திலே ஏந்தி நிற்கிற போக்கை என்னலே அம்பிட்டுத் தொலைவுக்கு ரசிக்க வாய்க்கல்லேங்கிறேன்! மரியாதையாய் என்ைேட வைரச் சிமிக்கியை என்கிட்டே நீட்டிப்பிடுங்க!'

ராமையாத் தேவரின் பேச்சில் ஆத்திரம் பதுங்கிக்கிடந்த ஏளனம் குரல் கொடுத்தது.