பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

2 2

முடிச்சு மாறிப் பயல் கையைப் பிடிக்கிறீங்க? அவன் கையை நீட்டினல், என் கை பூப்பறிக்கவா போயிடும்? என்னமோ, முதுகுப் புறத்தாலே பயங் கொள்ளியாட்டம் பாய்ஞ் என்னைக் கீழே தள்ளிப் போட்டான் அவன். அதுக்கு உண்டான கூவியை அவனுக்குக் கொடுக்காமலா இருக்கப் போறேன்? இந்தத் துப்புக் கெட்ட பயலுக்கு எங்க வீரமணி மாப்பிள்ளை யாமே? கேட்டீங்களா கதையை?’’ என்று, உறுமினர் பெரியவர்.

“ஆமாங்காணும்! உங்க வீரமணி எங்க வீட்டு மாப்பிள்ளைதானுக்கும்!”

இப் பேச்சைக் கேட்டதுதான் தாமதம். உடனே, ஆதிமூலத் தேவர் தன் மைந்தன் வீரமணி யைச் சந்தேகக் கண்ணுேடு பார்வையிட்டார். 'வீரமணி!” என்று விளித்தார். சாமிபாடியின் கண்களாக அவருடைய கண்கள் உருமாறின.!

வீரமணி கடைக்கண் ட | ள் ைவ ய ர ல் அன்னத்தை அளந்தவண்ணம் தன்னுடைய உரிமை யின் முடிவு பளிச்சிட, கம்பீரமான மிடுக்கோடு நடந்து வந்து நின்ருன். மெல்லிய குரலெடுத்து. "அப்பா!' என்ருன். ஏனுே அவனது அழகான கண்கள் இரண்டும் கலங்கிவரத் தொடங்கி விட்டன! r

'தம்பி வீரமணி! உன் அம்மான் ராமையாத் தேவன் உன்னை மாப்பிள்ளைச் சொந்தம் கொண் டாடிக் கும்மாளமடிச்சுக் கொக்கரிக்கிருனே? மெய்

• * *

திாளு அது: