பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

2

ஒரு மூடுக்கிலே முடுக்கிவிடப்பட்ட இயந்திரமாகக் குற்றவுணர்வு உறுத்தத் தொடங்கி விட்ட உண்மையை அவரால் தட்டிக் கழித்திட முடியாது. தான்!

அணில் ஒன்று கீறிச்சிடுகிறது.

அன்னக்கொடி ஈரம் களைந்து, அதாவது, ஈரத் துணிகளைக் களைந்து காய்ந்த கொட்டடியைக்கட்டிக் கொண்டு வந்து நின்ருள்; உடுத்தியிருந்த சேலையின் கொசுவத்தைச் சன்னமாக இழுத்துவிட்டுக் கொண் டாள். அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாற் போல, நெற்றியில் பூசிக் கொண்டு இருந்த விபூதி பின் பிசிறுகள் கண்களில் தெறித்துக் கண்களைக் கரிக்கச் செய்தன போலும்!-கசக்கி விட்டுக் கொண்டே நின்ருள் அவள்.

இந்நேரம் பார்த்துத் தான, ராமையா தன் டிகளை ஏறிட்டுப் பார்க்கவேண்டும்?-'ஆத்தாடி! கண்னெல்லாம் மிளகாய்ப் பழம் கணக்கிலே சிவந்துகிடக்குதே?-அழுதியா?" என்று பதற்றம் மூள வினவினர்.

"ஆத் தா மண்டையைப் போட்டதுக்கு அப்பாலே, என்னைத் தலை மேலே துரக்கி வச்சுக் கிட்டு கூத்தாடிக்கிட்டிருக்கிற அன்பான அப்பன் காரர். நீங்க கைக்கு மெய்யாய் இருக்கையிலே, நான் எதுக்குங்க கண் கலங்கவோ, இல்லாட்டி, கண்ணைக் கசக்கவோ போறேன்?' என்றுள் மகள்.

காது களில் ஊசலாடிய பழைய கற்சிமிக்கிகளைத் தடவி விட்டவாறு, 'அரிக்கன் விளக்கைப் பொருத்