பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251

2莎虽

ராமையா அருமை பெருமை மிகுந்த தனது தேள் கொடுக்கு மீசையைப் பாலைவனம் ஜமீந்தார் மாதிரி நீவி விட்டுக் கொண்டார். பிறகு, 'அன்னம், என்ளுேட ஆத்திரத்தை நீ சரியாய்ப் புரிஞ்சுக் கிடல்லே! உன் அயித்தை புருசன் சவடால் ஆதி மூலத்தேவன் நம்ப வெள்ளையையும் உன்னேட வைரச் சிமிக்கிகளையும் லாந்திப் பிடிச்சி வச்சுக்கிட்டு இருக்கிற குற்றத்துக்கு உண்டான தண்டனையை அந்தக் கிழம் நாளைப் பொழுதுக்குள்ளே அனுபவிக் கிருளு, இல்லையான்னு நீ பார்த்துக்க, ஆத்தா: தாளை மம்மலுக்கு நான் தஞ்சாவூருக்குப் பறந்து திரும்பினதும், கதை எப்படித் திரும்புதின்னு நீ பார்த்துக்க, அன்னம்!’ என்று சோளம் பொரித் தார் அவர், கண்களிலே ரத்தம் கட்டி நின்றது.

அன்னம் நம்பிக்கை இழந்து, அழமாட்டாத குறையாகச் சிரித்தாள்!

இருட்டும் சிரித்தது.

சிங்கப்பூர் ராமையா மகளிடம் என்னவோ சமாதானம் சொல்ல வாயெடுத்த நேரத்திலே, அவரது பண்ணைக்காரன் பரமசிவன் பேயடித்தவன் போல் ஓடி வந்து அவருடைய அழகான காதைக் கடித்தான்.

ராமையா, 'ஆ' என்று துடித்து விட்டார். 'அடி, பாவிச் சிறுக்கி!' என்று செருமிஞர் ராமையா. -

“என்னுங்க அப்பா சொல்லுறிங்க?"