பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259

念岳岛

"அதுதாங்க...... வந்து...அடடே! நெற்றித் கண்ணைத் திறந்துப்புடாதீங்க, தங்கச்சி! உங்க அப்பா தொடுத்து வச்சிருந்த செங்கமலம் காதுக்கு எஜமான் வைரச் சிமிக்கி போடலையாம். அந்த திட்டுரக் கோபம் தாங்காமல், துப்புக்கெட்ட அந்தப் பொந்துக்கிளி பொழுது பட்டடியுமே கை மாறிப் பறந்து போயிடுச்சாம்!

வேலைக்காரன் முண்டாசுத் துவாலேயை சனியன் விட்டது' என்கிற போக்கில் சுள்ளாப்போடு உதறிப் போட்டுக் கொண்டான்.

அன்னம் தலைகுனிந்தாள். 'புள்ளி-புதுப்புள்ளி யாராம்?' என்று தாழ்.குரலில் கேட்டாள். ஆற்ருமை கேட்டது. .

'அந்தத் துப்பு உங்க அப்பா திரும்பினால் தானுங்க புரியும்!”

'ஒ'கோ'

விழிநீருக்கு வழிகாட்ட அன்னத்துக்குப் புரிய வில்லை. -

திடுதிப்பென்று வெள்ளை' வீரிட்டுக் கதறிய து:

மறுகணம்:

"ஐயையோ! நம்ப வீட்டு வெள்ளைக்கா%ளமை யாரோ இருட்டிலே இழுத்துக்கிட்டு ஒடுருனே?... தங்கச்சி!...”

பரமசிவம் ஓலமிட்டான்:

'ஆ' என்று வீ ட்டு அலறினுள் அன்னம்:கதவை படா ரென்று திறந்தாள்: நிற்கவில்லை.