பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

27 of

பாக்கியம் இந்தச் சென்மத்திலே உனக்குக் கிட்டவே கிட்டாது; கிட்டவும் இந்தச் சென்மத்திலே விடவும் மாட்டேன் நான்! ஏன், தெரியுமா? உன் நேச மச்சான் வீரமணி எனக்கே திருப்பூட்டுறதாக ஆத்தாளைச் சாட்சி வச்சு, எனக்குக் கையடிச்சுக் கொடுத்திருக்காகளாக்கும்! அந்தச் சத்திய வாக்கை நான் வேத வாக்காய் நம்பித்தான், நான் என்ளுேட அருமை வீரமணி மச்சானுக்குக் கண் ஞாலம் காட்சிக்கு முந்தியே ஒரு நிலா ராத்திரியிலே நான் முந்தானை விரிச்சுப்புடத் துணிஞ்சேளுக் கும்! ...”

மின்னமல் முழங்காமல் இடி இடிக்குமா, என்ன?...

20. அன் னக்கொடி- பவளக்கொடி!

திட்டமிட்ட காரியத்தைத் திட்டமிட்டவாறே செய்து முடித்து விட்ட ஆணவத்துடன் நின்று கொண்டிருந்த சிலட்டுர்க் கங்காணி மகள் கன்னி பவளக்கொடியை நோக்கி ஆத்திரம் கொடிகட்டிப் பறக்க நடந்தாள் ஆவணத் தாங் கோட்டை ராமையாத் தேவர் மகள் அன்னக்கொடி வஞ்சினத் துடன் அடி பாவி!... பழிகாரி!' என்று வீரிட்டுக் கொண்டே விரைந்தாள் அவள். வீரிட்ட குரல் iங்கி வெடிப்பதற்குள், பவளக்கொடியின் கறுப்புக் கதுப்புக் கன்னங்களிலே ஓங்கி ஒர் அறை விட்டாள்

அன்னம். -