பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275

275

பசையும் பச்சாப்பும் மிகுந்த பெருந்தனக் காரரின் மகள் பவளக்கொடி இந்தப் பயங்கரமான அறையை எப்படி எதிர்பார்த்திருப்பாள்? பாவம், அவள் அப்படியே கதிகலங்கி, பொறிகலங்கி நின்று விட்டாள்!

"கேடு கெட்ட குட்டி உனக்கு என் மூஞ்சியிலே அறையறதுக்கு அம்மாம் கொழுப்பு முட்டிப் பூடுச் சாங் காட்டி?’ என்று கொள்ளிவாய்ப் பிசாசு மாதிரி கத்திக் கொண்டே, அன்னக்கொடிக்குப் பதில் அறை கொடுக்கக் கையை ஓங்கலானுள் பவளக்கொடி.

பவளத்தின் சவடால் அன்னத்திடமா சாயும்? அன்னம் அவள் மார்பில் கைவைத்து ஆவேசத் தோடு அவளை அப்படியே எட்டித் தள்ளிவிட்டாள்.

நாவற்பழம் மண்ணிலே உதிருமே, அந்தக் கதையாகச் சாய்ந்தாள் பவளம். பின், பதனமாக எழுந்தாள்; நின்ருள்.

பொங்குமாங்கடலெனக் காட்சியளிக்கின்ருள். கன்னிக் கொழுந்து அன்னம்!

“அடி, பாவிப்பட்டி!...அடி, மூதேவி! தர்ம ராட்டமும் அரிச்சந்திரராட்டமும் மா ன த் தோடவும் மனிதாபிமானத்தோடவும் ஊர்நாட் டிலே நடமாடிக்கிட்டிருக்கிற என்ைேட அன்பு அத்தான் வீரமணி மேலேயா இருந்திருந்து நீ பழி பாவம் சுமத்தத் துணிஞ்சே? என் ஆசை மச்சான வீரமணி பேரிலே அநியாய அவதூறு சுமத்துறதன்