பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283

38 3

அத்தானை ஏக்கத்தோடும் சோகத்துடனும் பார்த்தவண்ணம், வெள்ளையைக் கைத்தாங்க லாகப் பிடித்துச் சென்று மாட்டுத் தொழுவத்தின் நிழலில் கட்டிப் போட்டுவிட்டுத் திரும்பிய அன்னத் தின் பேதை நெஞ்சமும் கூடத்தான் கட்டிப் போட்டுவிட்ட பாங்கில் தவித்தது; தடுமாறியது!

பவளக்கொடியையும், அன்னகொடியையும் வீரமணி மாறி மாறிப் பார்த்தான். அவனுக்கு அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை.

‘ என்ன நடந்திச்சு, அன்னம்?’’

'மச்சான்!” என்று மீண்டும் விம்மினுள் அன்னம். நடந்த கதையை எங்ங்ணம் விளக்குவது என்ற துப்பு விளங்காமல் குழப்பமும் ஏக்கமும் சலனமும் சூழ்ந்திட வீரமணியை உறுத்துப்பார்வை யிடலானள் கன்னி. என்ன நடக்கப்படாதின்னு நான் கவலைப்பட்டேனே, என்ன நடக்காதின்னு நான் நம்பினேனே, அது நடந்து போச்சுங்க!' என்று பொருமினுள் அவள். தொடிர்ந்து, பவளக் கொடியை நடுங்கும் விரலால் சுட்டிக் காட்டி, "இவளைத் தெரியுமா உங்களுக்கு?' என்று ஆத்திரக் குரலெடுத்துக் கேள்வி கேட்டாள் அன்னம்.

குழப்பமும் சங்கடமும் மலிந்திட, பவளக் கொடியை ஏற இறங்கப் பார்வை பரப்பின்ை வீரமணி; எங்கேயோ எப்போதோ அந்த முகத்தை, அந்தப் பார்வையை இதற்கு முன்னம் சந்தித்திருப் பதாகவே, அவனுக்குப் பட்டது. பிறகு, பவளக் கொடியை அன்புடன் ஊடுருவியவகை, சற்றே