பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

388

தொட்டு என் நெஞ்சைத் தொட்டவங்க நீங்க, துல்லிதமான அந்த மயக்கத்திலே மயங்கினேன் நான். ஆன நீங்களோ அன்னத்தையே கொண்டுக் கிடப் போறதாகத் தீர்ப்புப் படிச்சிட்டீங்களாம்! ஐயோ, நீங்க எனக்குத் துரோகம் செஞ்சிட்டீங் களே! மச்சான்!”

வீரமணியின் இதயத்தை என்னவோ ஒர் உணர்வு பிராண்டத் தொடங்கியது. "நான் எப்படி உனக்குத் துரோகம் செஞ்சதாக அர்த்தமாக முடியும், பவளக்கொடி?’’

"நீங்க எனக்குத் துரோகமே செய்யலையா? ஒரு நிலா ராத்திரிப் பயணத்திலே என்னை எங்க ஊர் மாரியத்தா கம்மாய்க் கரைப் பத்தைப் பக்கம் சந்திச்சு. என்னையே நீங்க கண்ணுலம் கட்டிக்கிடு றதாக ஆத்தா பேரிலே ஆணை வச்சுக் கையடிச்சும் கொடுத்தீங்களே, அப்ப என்ன நடந்திச்சாம்?”

தலையில் இடிவிழுந்த மாதிரி தலையைக் கெட்டி யாகப் பிடித்துக் கொண்டான், வீரமணி.

“ஒரு ஆவணிக் கெடுவிலே உங்க ஊரையும், எங்க ஊரையும் ஒருமிக்கக் கூட்டி ருசுப்படுத்திச் சொல்லத்தான் போறேன்! நீங்க என்னை ஆசை காட்டி, மோசம் பண்ணிக் கெடுத்த மாதிரியே, நீங்க உங்க முறைப்பொண்ணு அன்னக்கொடியை யும் ஆசை காட்டி, மோசம் பண்ணிக் கெடுத்தி ருக்கீங்க என்கிற நடப்பையும் முதலிச்சு மெய்ப் பிக்கத்தான் போறேன். ஆமா!...”பேயாகக் கொக் கரித்தாள் பவளக்கொடி. .