பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289

289

அன்னம் திகைத்தாள். அந்தக் கும்பல் வெகு. நேரமாக மறைந்து நின்று இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்திருக்குமோ?...

வீரமணியும் அந்தக் கூட்டத்தைக் கண்டு கொள்ளத் தவறி விடவில்லை. பவளக்கொடி புதிய தெம்பு வரப் பெற்றவளாக விறைத்து முறைத்து நின்றதைக் கண்ட வீரமணி மறுபடி ஆத்திரம் கொண்டுபவளத்தை மடக்கிச் சாட முனைந்தான்.

ஒடினுள் அன்னம். மச்சான்! பவளக்கொடி. உங்க மேலே ஒரு பழியைச் சுமத்திப்புட்டா! அதுக்காக, நீங்க இன்னுெரு பழியைச் சுமக்கலாமா? நாலு சுவர்களைத் தாண்டி இப்ப நாம நின்னுக் கிட்டு இருக்கோமாக்கும்! ஆகச்சே, எம்பேச்சை நீங்க சுயபுத்தியோட நெஞ்சிலே வாங்கிடவேணும்! ஊருக்கு முன்னிலையில் இப்ப நாம ரெண்டு சங்கதி களை நிரூபிச்சுக் காட்டக் கடமைப்பட்டிருக்கோம்! ஒண்ணு, நீங்க சீதைக்கு ஏற்ற ராமர் அப்படின்னு, மெய்ப்பிச்சுச் காட்டியாகணும்!... ரெண்டாவது, நான் ராமருக்கு ஏற்ற சீதை அப்படின்னு. மூதலிச்சுக் காட்டியாக வேணும்! அப்பத்தான் நீங்களும் நானும் தலை நிமிர்ந்து நின்னு, இந்தப். பவளக் கொடியைத் தலகுணிய வைக்க முடியும்!" என்று உணர்ச்சிகள் பீறிடக் கதறினுள் அன்னக் கொடி. -

மறுகணம்:

இடி இடிப்பது மாதிரி, அட்டகாசமாகச் சிரித்து முழக்கியவளாக, கூட்டத்தைச் சாடிப்