பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

3&o

"அன்னம்:...கடன் இல்லாத சுயேச்சை மனித னுக - சுதந்திர வீரமணியாக நாணயத்தோடவும் நேர்மையோடவும் நம்ப ஊர்ச் சமுதாயத்தின் வீதிகளிலே தலைநிமிர்ந்து நடமாடவே நான் ஆசைப் படுகிறேன். அப்பத்தான், என் சுய கவுரவம்-தன் மானம் தப்பிப் பிழைக்கும். அப்பன் பாட்டன் சேர்த்து வச்ச நில பலம் அப்படியே காடுமாறிப் போனல் போகட்டுமே?-என்ளுேட நெஞ்சிலே உர மும், நேர்மைத் திறமும் ஆத்தா பலமும் இருக்கை விலே கேவலம் ஒரு காணி நிலத்தைக்கூட-சுயார் ஜிதமாய்க் கிரயம் பண்ணத்தான என்னலே முடி யாமல் போயிடப்போகுது?...'

வீரமணி மெய்ம்மறந்தான்! சேரிப் புறத்தினின்றும் நரியின் ஊளேச் சத்தம் கர்ணகடுரமாக மிதந்து வந்தது.

அந்தச் சத்தம் வீரமணியை என்னவோ பண்ணியது. அம்மான் ராமையாத் தேவரிடம் தன் தகப்பன் பட்டிருக்கும் கடன் அவனைக் கலங்கச் செய்தது, மீண்டும். கடன் கழிந்தால் காற்றுப் போலே!-மேய்தான். ஆனால், உபாயம்?... யோசனை சூடேறியது. பவளக் கொடியின் பழிசுமத்திய படிை மும் குறுக்கே பாய்ந்தது. கண்கள் சிவந்தன. தன் னிடம் மூத்தாய்ப்பு வைத்து அன்னம் சுட்டிய அந்த இரு பொறுப்புக்களையும் நினைத்தான். காற்றில் படிபடித்த தமிழரசியின் புனிதப் பதில் கடிதத்தின் மீது தாகூரைச் சுமை வைத்தபோது, ஏடு புரண் டது. உனது சிம்மாசனத்திலிருந்து இறங்கி வந்து என் குடிசையில் நிற்கிருய்!... பாடிப் பழக்க