பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

307

3:{} 7

கண்கொள்ளாக் காட்சியை நடைமுறையில் சொல்லிக் காட்டும் அர்த்தத்தில், பொழுது மெல்ல மெல்ல விடிந்து கொண்டிருக்கிறது,

வீரமணி நீராடி, நீறு தரித்துக் காளியம்மனச் சந்தித்துத் திரும்பினன். வீட்டின் தலை வாசலை மிதித்ததும் அவனுக்குத் திகீ ரென்றது. வீட்டை ஏக்கமும் சோகமும் சூழ, ஏற இறங்கப்பார்வையிட் டான். எதை நினைப்பான்? எதை மறப்பான்? நீள் மூச்சுப் பிரிந்தது. பிரிந்து கிடந்த யூரியாஅமோனியம் பாஸ்பேட் உரங்களைக் கண்டதும், அவனுக்கு நெஞ்சை அடைத்துது. கண்கள் குளமாயின. ‘அன்பு, தர்மம், சத்தியம் முதலான மனிதாபிமானக் குணப் பண்புகளை மனிதன் கைவிடாத பரியந்தம், அவனத் தெய்வம் ஒருபோதுமே கைவிடாது! பின், மனிதன் ஏன் தெய்வமாக ஆக முடியாது?-தெய்வமாக ஆகா விட்டாலும், மனிதன் கேவலம் மிருகமாக மாருமல், கடைசிப் பட்சம் மனிதன் மனிதனுக நிலைத்து நிற்கவாவது பழகக்கூடாதா? ஆத்தா'- கொட் டாவி தொடர்கதை படித்தது.

விடியாத இரவும் விடிந்து விட்டது:

தண்டோராச் சத்தம் கேட்டது.

பாம்பைக் கண்ட பாங்கிலே பயந்து, ஆளுல், பாம்பை நோக்கிப் பாய்ந்தவராக வெளியே ஒடி வந்தார் பெரியவர்: "ஐயையோ,தெய்வமே!ஐயோ, ஆத்தா!' என்று நெஞ்சைப் பிசைந்துகொண்டே ஒலம் பரப்பினர்.