பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309

309

வேண்டிய கடன் பூராத்தையும் இந்நேரம் அடைச் சிருப்பேனே?- புரோ நோட்டிலே வரிஞ்சுக்கிட்டு ஆனல், கொடுக்காமல் ஏமாற்றின பணம் ரூபாய் ரெண்டாயிரத்துக்குத்தான், அது க்கு மேலே பெறு மதி கொண்ட வைரச்சிமிக்கி ரெண்டையும் சிக்க வச்சுக்கிட்டேனே! நீ பவளக்கொடியைக் கொண்டுக் கிட ஒப்புதல் சொல்வியிருந்தால், உன் பேரிலே எந்தப் பழியையுமே அந்தப்பவளப் பொண்ணு மனசு துணிஞ்சு சொல்லியும் இருக்காதே? ஐயையோ ஊருக்கு நாட்டாண்மை செஞ்சுக்கிட்டு தலைமுறை தத்துவமாய்க் கட்டிக் காத்து வந்த நம்ப குடும்ப கவுரவமும் மானமும் கப்பலேறப் போகு தேடா, பாவி!” என்று புலம்பினர்: மண்டையில் அடித்துக் கொண்டு, மயிரைப் பிய்த்துக் கொண் டார் முதியவர்.

வீரமணி அமளி துமளியாகச் சிரிப்பைக் கக்கினன், விதியின் சிரிப்பல்லவே அது?

'அட, ரோசம் கெட்டவனே! நீ என் மகளு? சே! நான் வயிறு வெடிக்க அழுகிறேன். நீ வயிறு குலுங்கச் சிரிக்கிறீயா? சிரி! நல்லாச் சிரி மானம் இல்லாமல் இப்படிச் சிரிக்கிறியே நீ? நீ என்ன பெரிய விதியாக்கும்? ம்...இன்னும் நல்லாய்ச் சிரி. பொட்டுப் பொழுதுக்குள்ளே என் சீவன் பட்டுன்னு பிரிஞ்சிடும்!...நல்லாச்சிரிடா, பாவி மகனே!"

"அப்பா!' என்று கூக்குரலிட்டான் வீரமணி. “ஆமா,நான் பாவி மகன்தான்!” என்றுவிம்மினன். 'ஏய் வெத்து வேட்டு நாட்டாண்மைக்காரரே!

கா. நி.-20