பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

'3. ()

கையாலாகாத பேடி கணக்கிலே புதுக்கிக்கிட்டு இருந்தால், சட்டம் உம்மைச் சும்மாவா விட்டுப் பூடும்? வாருங்காணும், வெளியிலே' என்று கொள்ளிவாய்ப் பிசாசாக இடிமுழக்கம் செய்து கொண்டிருந்த தாய்மாமன் ராமையாத் தேவரின் கடுகணைகளை நெஞ்சில் உதிரம் வழிய ஏந்தியவனுக, அருமைத் தந்தையைத் தரையிலே கிடத்தி விட்டு, உன்ளே தாய் வீட்டுக்கு ஒடித் திரும்பினுன் வீரமணி 'அப்பா, நான் பாவிமகனே, என்னவோ!- அந்தத் துப்பு உங்களுக்குத்தானே புரியுமுங்க ஆளு, நான் பாவி இல்லே! இன்னொரு ரகசியத்தை நீங்க புரிஞ்சுக் கிட்டால் தேவலாம். உங்களுக்கு ஆயுக கெட்டி!' என்று தாழ்.குரலில் கூறிவிட்டு, தலைவாசலுக்கு ஒடத்தலைப்பட்டான் ஆதிமூலத்தேவரின் புதல்வன். பிறகு என்ன நினைத்துக் கொண்டானே? திரும்பவும் தந்தையைப் பிடித்து உட்காரவைத்தான்.'அப்பா, விதி என்ன விதி?... விதியை மதியாலே வெல்லலா மாக்கும்!" என்று தெரிவித்துவிட்டு மறுபடியும் வாசலுக்கு ஓடலானன் வீரமணி. t

நெற்றிக்கண் திறந்தான் கதிரவன்.

சமுதாயம் என்பது வெறும் நாலு பேருக்கு மேற்பட்டது, அப்பாற்பட்டது என்கின்ற நியதிக்கு வாய்த்த தத்துவமெனக் கூட்டம் நிர்த்துள்ளிப் பட்டது. -

வீரமணி தலைவாசலில் வந்து நின்ருன்; கூட்டத்தை நாட்டத்தோடு நோட்டம் இட்டான்;