பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

品星忍

"எங்களோட வீடு வாசலையோ, இல்லே, நிலம், நீச்சையோ, இல்லே, காடு கரம்பையையோ ஏலம் விடுறதுக்கு நீங்க செத்துச் சிவலோகம் போய்த் திரும்ப வேணுமாக்கும்' என்று அரும்பு மீசை யைக் குறும்பாக முறுக்கிக் கொண்டே எக்காள மீட்டான் வீரமணி. கண்களில் ரத்தம் வடிகால் அமைத்திருந்தது. -

புத்தி தடுமாறியவர் போன்று பாய்ந்து வந்தார். நாட்டாண்மைத் தேவர் ஆதிமூலம், பதுங்காமல் பாயுமே கிழட்டுப்புலி, அப்படி! டேய் ராமையா! உம்புட்டு மானம் மரியாதை எல்லாத்தையும்ே. உன்னுேட சிறுக்கி செங்கமலம் ஏலம் போட்டுப் புட்டு, வேடிக்கை க ா ட் டி, வே டி க் ைக. பார்த்துக்கினு நிற்கிருளே?- அந்த இடு சாமக் கதையை யெல்லாம் மறந்துப்புட்டியாடா? என் உயிர் என்ைேட எலும்புக் கூட்டிலே உறைஞ்சு இருக்கிற மட்டுக்கும் உன் பேராசைக் கோட்டை பிலே இடியைத் தான் வீசுவாள் ஆத்தா மகமாயி! எனக்கு முன்னலேயே என்ளுேட சொத்துக்சுகங்களை ஏலம் போடப்போறேன்னு நாக்கு மேலே நாக்கும் போட்டு நீ சொல்லுறதுக்கு உனக்கு அம்மாம் தைரியம் வந்திடுச்சாடா? ஊம், எங்கே காட்டு, உன் கைவரிசையை? நானும் உன்னை ஒரு கை பார்த் துக்கிடுறேன்! ம்...' என்று உச்சாடனக் குரல் எடுத்து முழங்கினர் பெரியவர். அவிழ்ந்து திரிந்த வெண்முடிகளே முடிந்து கொண்டார் அவர்.

நல்ல பூமியின் அமைதி கலேந்தது.