பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

3 Ö

எதிர்ப் புறத்திலிருந்து சூறைக் காற்ருகப் பறந்து வந்தது ராமையாத் தேவரின் ரேக்ளா வண்டி.

ஆதிமூலத்தேவருக்குத் தி.கீரென்றது. 'முரண்டு’ பிடித்து சண்டித்தனம் பண்ணின காளையைத் தென் வசத்தில் முறுக்கி இழுத்து, கால்வாயில் சறுக்கி விடாமல் தற்காத்துக் கொண்டார் பெரியவர். பிடி கயிற்றைத் தளர்த்தி நிதானமாக வசப்படுத்தி, நேர்த்தடத்தில் வண்டியை மேற்கே செலுத்தினர். ஒரு வண்டி போகவும், மறுவண்டி வரவும் தோது கொண்ட தடத்தில், சுளுவாகவே வண்டியைச் செலுத்தி வர இயலும். ஆனல் கண்களே மூடிக் கொண்டு பறந்து வருபவன் ராமையா ஆயிற்றே?"மச்சான் ராமையா என்ருல் சாமான்யமான மச்சான? அடுத்துக் கெடுத்த அயோக்கியனச்சே? தெய்வத்துக்குப் பயந்து, நேர்பாதையிலே அவன் தாராளமாகப் போகலாம்! அந்த நயவஞ்சகப் பாவி தடம் தவறி வந்தால், அப்புறம் அவனைச் சும்மாவா விடுவேன்? என்னமோ, ஒரு புரோநோட்டுக்குள் ளாற தான் லோகமே அடங்கி முடங்கிக் கிடக்கு தின்னு அவன் பகல் களு கண்டுக்கிட்டிருக்கான்! பாவம்'... நினைவுகள் சூடுபிடிக்க, அவர் வெகு எச்ச ரிக்கையோடு வண்டியை ஒட்டிக் கொண்டிருந்தார்.

ஆல்ை...... -

பறந்து வந்த ரேக்ளாக்காளை, படாரென்று கூட்டுவண்டிக் காளை மீது முட்டி மோதிவிட்டது!