பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

| 3 || 8

சமையல் காசிக்கு அப்பொழுதுதான் புயல் கலந்த அமைதியுடன் வெளிக்கூடத்தை மெள்ள மெள்ள எட்டிப் பார்க்கத் தென்பு பிறந்தது. அதிசயக் கூத்தாகத் தந்தையும் தனயனும் சண்டை போட்டுக் கொண்டதும், ஆனந்தக் கூத்தாகச் சமா தானம் அடைந்ததும் அவருக்குச் சொப்பன மாகவே தோன்றியிருக்கலாம். ஊறிய மகிழ்வில் திளைத்தவராக, வானெலியை மெல்ல மெல்லத் தொட்டார்.

"சீர்த்து வாழ வேண்டும்!-பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!

சின்னவருக்கு சிரிக்கவும் தெரியும்!

பெரியவருக்கு அழவும் தெரியும்!

கொட்டு மேளம் கொட்டியது ஆவணி.

‘ஆயி மகமாயி வெறும் கல் அல்லள்!-அவன் சிரிக்கிருள்; சிரித்துக் கொண்டே இருக்கிருள்! ஊராண்டு, உலகாளும் அன்னையின் அறக் கருணைச் சிரிப்பு அல்லவா அது!

கும்பிட்ட கரங்கள் ஜோடி சேர்த்தும், ஜோடி சேர்ந்தும் கும்பிட்டுக் கொண்டிருக்கின்றன.

'அம்மான் மகளே!'

'அயித்தை மகனே!'

"எல்லாம் நீங்க தந்த பாக்கியம்: ஆத்தா, இட்ட மடிப் பிச்சை!” என்று மெய்ம் மறந்து பேசி ளுள் அன்னக்கொடி.