பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35



ாசநெஞ்சம் உயிர்க் கழுவில் துடித்தது. ஆத்தா!' என்று செருமினன். பசுவையும் கன்றையும் பரிவு உன் தடவிக் கொடுத்துவிட்டு மடங்கினன் தனயன்.

நடையன்கள் பின்தங்கின.

செவலையை வைக் கோல் பரண் அடியில் கட்டிப் போட்டுத் தீவனம் போட்டுத் திரும்பினர் பெரியவர். வாப்பா, போகலாம்,' என்று மகனைக் கூப்பிட்டார். தலைவாசல் நிலைப்படியைக்கடந்து தயங்கித் தயங்கி இரண்டாம் கட்டை அடைந்தார். கிழக்குப் பக்கத்துச் சுவரைத் தவிப்புடன் ஏற இறங்கப் பார்த்தார். பிறகு, 'தம்பி, உன்னைப் பெற்ற புண்ணியவதி உன்னை ஆசீர்வதிக்க உள்ளாற காத்துத் தவம் கிடக்கிரு: போய்க் கும்பிடப்பா,’’ என்று தாழ்வான குரலில் கூறினர்.

வீரமணி கூடத்தில் வந்து நின்ருன் மேனி அல்லாடித் தள்ளாடியது. அன்னையின் படத்தைத் துடிப்புடன் நோக்கினன். பெற்ற ஆத்தாளுக்குக் கும்பிடு கொடுத்தான். கண்களில் பாசம் வழிந்தது; நெஞ்சில் உதிரம் வழிந்தது. அன்னே இட்ட தீ அடி வயிற்றில் எரிகிறது. அணையாத பாசத்தி!அவனை-தவமிருந்து பெற்ற குலக்கொழுந்தை வாழ்த்தவும் வாழவைக்கவும் கடமை கொண்ட பாசத்தின் தீ! - விசும்பல் கேட்டது. திரும்பிப் பார்த்தான். அவன் எதிர்பார்த்த நடப்புத் தான்! * அப்பா!' என்று விம்மினன். அவருடைய கண்ணிரைத் துடைத்து விட்டான். சத்து மிக்க கரங்கள் சத்திழந்து நடுங்கின. தேவர் மூக்கைச்