பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

44

தேவர் நன்றியோடு காசியை நோக்கினர். நீ கூறுவது மெத்தச் சரி என்கிற பாவனையில் கையை அமர்த்திச் சமிக்ஞை செய்தார்,

மணி. பதினென்று முப்பது.

வீரமணிக்கு இ ரு ப் பு க் கொள்ளவில்லை. தகப்பனரின் முதுகைப் பத்திரமாகப் பற்றிப் பிடித்துத் தாங்கிக் கொண்டே, 'எழுந்திருச்சு உட்கார்ந்துக்கங்கப்பா. நீங்க பசியாறினுல்தானே என் பசி ஆறுமுங்க?’ என்று மடக்கினன்.

அன்பெனும் பிடியில் அவர் அகப்பட்டிருக்க வேண்டும். மறுபடி சுடு நீர் மடை திறந்தது. சூம்பிய கன்னங்களில் வழிந்தது. மயிர்க் கால்கள் காளான்களாகக் குத் திட்டு நின்றன.

தொடுத்த விழி எடுக்காமல், பெற்றவரையே பார்த்துக்கொண்டிருந்தான் வீரமணி. அப்பா ஏன் இவ்வாறு எப்போதும் கண் கலங்குகிருர்? கையோடு கூட்டி வந்த சீதேவியைக் கையுடனேயே கூட்டிச் சென்று விட்ட விதியின் நாயகியை நினைத்தா? அல்லது, சூதுமதி விதியாகி, தெய்வத்திற்கும் கூடப் பயப்படாத வகையிலே, த ங் க ள் குடும்ப கவுரவத்தை அறையினின்றும் அம்பலத்திற்குக் கொண்டு வரக் கங்கணம் கட்டித் திரியும் அம்மான் ராமையத் தேவரின் பேய்க் குணத்தை எண்ணியா? அப்பாவின் அவல நிலைக்கு என்ன காரணம்? யார் காரணம்?

எதிர்க் குடிசைக்குச் சொந்தமான கோழிக்கு இப்பொழுதுதான் பொழுது விடிந்தது போலும்!