பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

50

துகையலில் கடுகத்தனை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் வீரமணி. தொண்டையில் இறங்கிய உறைப்பு உந்திக் கமலத்தைத் தொட்டு நின்றதை அவன் உணர்ந்த பொழுது, அம்மான் மகள் அன்னக்கொடியும் அதே சடுதியிலே நினைவில் உறைத்து நெஞ்சைத் தொட்டு நின்ற அதிசயத் தையும் அவனல் பூரணமாக உணர முடிந்தது. அன்னக்கொடி பொய் சொல்லுவாளா, என்ன? ஊகூம்! “ அம்மான் மகளே...... அன்னம்! -சாதி மல்லி நெஞ்சிலும் நினைவிலும் மணக்கத் தலைப்பட் டது. பூவின் மணத்தில் பூவையின் பேச்சுக்களும் மனத்தன.

பச்சைக் கொத்துமல்லித் துகையல் ஆராய்ச்சி நடத்துகிறவர் மாதிரி துளித் துளியாகச் சுவைத்து, ருசி பார்த்து, சோதித்துக் கொண்டிருந்த தேவர் வெந்நீரில் ஒரு வாய் அருந்தி விட்டு, தம்பி!' என்று குரல் கொடுத்தார்.

வீரமணி கலைந்த சிந்தனையோடும் கலையாத கனவோடும் ' என்னுங்க?' என்ருன்.

வீரமணி, பச்சைக் கொத்துமல்லித் துகையல் என்ருல் உனக்கு ரொம்ப நாள் தொட்டே ரொம்ப ரொம்பப் பிடிக்குமில்லையா?” என்று கேட்டார் பெரியவர். -

இத்தகைய விசாரிப்பை இப்போது அவன்

எதிர்பார்த்து இருக்கவில்லைதான். இருந்தாலும், அவன் திடமான குரலெடுத்து, "ஆமாங்க!' என்று