பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

7.3

'சுத்தமான பேச்சு, வீரமணி. உன் அம்மான் கடனை உளவடைக்க ஒரு தோது பண்ணியிருக்கேன். அது கிடக்கட்டும். இப்போ ஒரு முக்கியமான காரி யத்தைப் பத்திப் பேசிக் கலந்து நாம ஒரு நல்ல முடி வுக்கு வந்தாக வேணும். ரொம்ப அவசரமான காரியம் இது; அவசியமான காரியமும்தான்!” தேவரின் உதடுகளில் இதயம் துடித்திருக்க வேண்டும்.

'என்ன காரியமுங்க அது?’’

“நல்ல காரியம்தான், தம்பி! மங்களகரமான சேதிதான், மகனே! நம்ப வீட்டு வாசற்படியை மிதிக்க ஒட்டமும் நடையுமாய் வந்துக்கிட்டி ருக்குதே ஆவணி? இனிமேலும் அந்த நல்ல சங்கதி யைப்பத்தி உன்கிட்டே சொல்லாமல் மெத்தன மாய் இருப்பேன நான்? இந்தாலே சொல்லிப்பிடு றேன், வீரமணி!' ..

ஆதிமூலம் பேச்சை நிறுத்தினர்.

அவரா நிறுத்தினர்:

அவருள் வெடித்திட்ட புகைச்சல் இருமல் அல்லவா நிறுத்தித் தொலைத்தது! -

வீரமணி வாய்பிளந்து நின்ருன்: அவனுடைய் நெஞ்சம் அவனிடமா தஞ்சம் அடைந்திருந்தது?

அந்தச் சத்தியம் அன்னக்கொடிக்குத் தான் தெரியுமோ?