பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76

'சொல்லத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்: சொல்லவும்தான் போறேன். கதிர் பறியத் தலைப் பட்ட நிலத்திலே வாய்க்கால் வழியே முறைத் தண்ணி ஒரு சீராய்ப் பாய்ஞ்சோடுற தொப்ப, என்ளுேட நெஞ்சடியிலே ஒழுங்கு முறையாக ஊர்ப் பட்ட எண்ணங்கள் ஒடிக்கிட்டு இருக்கையிலே, வேறே சில நினைப்புக்கள் என் மனப் போக்குக்குச் சவால் விடுறதாட்டம் குறுக்குமடை பாய்ச்சுது. இப்படியான அவலக் குழப்பத்துக்கு நடுவிலே போராடிக்கிட்டிருக்கக் கூடிய எனக்கு, எதை, எப்படி ஆரம்பிக்கிறதின்னு மட்டுப்பட மாட்டேங் குது. சே! பிறவி என்கிறதே ஒரு கடனட்டம் தான். பட்ட கடனுக்குப் பட்டுத் தீர்க்கக் கடமைப் பட்டதுதான் இந்தப் பிறப்பு, படைச்சவன் மனுசன வாய்-பேச வச்ச ஒரு குற்றத்துக்காக, மனுசன் வாய் பேசத் தெரியாத மிருகத்தைக் காட்டிலும் கேடாக எம்புட்டோ குற்றங்களைச் செய்கிருன். ஆளுல் அவன் செஞ்ச குற்றங்களை அவனே சுமந்து அறுவடை செய்ய வேண்டியவன் என்கிற சத்தியத்தை அவன் மறந்தே போயிடுருன், பாவம்! அதனலே தான் அவன் தர்மத்தை மறந்து, அன்பை மறந்து, பண்பை மறந்து, நீதியை மறந்து, ரோசம் கெட்டு, மானம் கெட்டு ஈனத் தனமாய் ஆடுருன்; பணத்தைக் கட்டிக்கிட்டு ஆடுகிருன். ஆன, மண்ணிலே பிறந்தவன் மண்ணுக்கே உடைய வன் என்கிற தடயம் கேவலம் இந்த மனுசனுக்குப் புரியவே புரியாதோ? ஊம்...பூனைக்கு மத்தியிலே