பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

S全

மாய்த் தன் கை விரல்களிலே காட்சியளித்த உறைக்

கடிதத்தை-உறைகிழிக்கப்பட்டிருந்த கடிதத்தைப் படித்துப் பார்க்க முனைந்தான் வீரமணி.

"அன்பிற்கினிய அன்பர் திருமிகு வீரமணி அவர்கட்கு,

அஞ்சலிகள்.

‘காதல் ஒர் எழிற்கனவு’ என்று ஒரு நாவலா சிரியர் குறிப்பிட்டிருந்ததை நான் நாளும் பொழு தும் நினைத்துக் கொள்வது உண்டு.

காதல் மாதிரியே, காலமும் ஒரு அழகான கனவுதான். கனவுக்கு அழகு கூட்டி, அழகுக்குக் கனவு காட்டும் காரணத்தினுல்தான், காலத்தை எழிற்கனவு என்று குறிப்பிட்டேன் நான்.

நீங்களும் நானும் நட்பின் பின்னணி யிலே அன்பின் பெயரால் பின்னிப் பிணைந்திருக் கும் சக்திக்கு-மகத்தான சக்திக்கு அன்பு' என்று மட்டுந்தான் பெயர் சூட்டப் போகிறீர்களா?அப்படியேதான் காலமும் சொல்லிக் காட்ட வேண்டுமா?

'அன்பு எதையும் கேட்காது; கொடுக்கவே செய்யும்!’-இது அண்ணலின் அமுத மொழி.

நம் இருவரைப் பொறுத்த அளவிலே, என் அன்பு கொடுக்கத் தவம் இருக்கிறது.

ஆனால், உங்கள் அன்பு எதையும் என்னிடம் கேட்டால்தானே?...