பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

90

வீரமணி, கைகழுவி வந்த தந்தையை நெருங் கிளுன்; இடுப்பில் செருகியிருந்த பொட்டலத்தை எடுத்தான். இதிலே தஞ்சாவூர்ப் பயணச் செலவுச் சிட்ட்ையும் மீதிப்பணமும் இருக்குதுங்க,' என்று: நீட்டினன்; முகப்புப் பக்கம் நாடின்ை.

இருப்புப் பெட்டகச் சாவியும் கையுமாக மீண் டார் பெரியவர்.

"ஆவன்னு-தீனவுக்கில்லே!... நீங்க பிள்ளை வளர்த்ததாட்டம் அத்தனை பாசத்தோடவும் அம்புட்டுக் கண்டிப்போடவும் வேறே யாராலேங்க வளர்க்க முடியும்? உங்க மாதிரி ஒருத்தர் இந்தச் சுற்றுவட்டம் பதினறு ஊர்ப் புறத்திலேயும் இனி மேல் பிறந்து தலையெடுத்தால்தான் உண்டு. மறு தாரம் கல்யாணம் பண்ணிக்கிட்டா, வீட்டுக்கு வருற புண்ணியவதி இந்தத் தாயில்லாப் பிள்ளையை ஒரவஞ்சனையாய் நடத்தி, இந்தப் பிள்ளை கண்ணக் க்சக்க நேர்ந்தா என்ன ஆகிறது என்கிற அந்த ஒரே கவலையிலே தானுங்களே, அந்த நாளையிலே உச்சத்திலே ஆண்டப்பக.ட நீங்க ரெண்டாந்தாரம் கட்டிக்கிட ஒப்பவே மாட்டேன்னு வைராக்கியமாய் மறுதளிச்சிட்டீங்க? உங்க ரோசமும் வைராக்கிய மும் ஊரறிஞ்சதாச்சுங்களே? என்னமோ, காலம் வெல்லலே!-உங்க இஷ்டப் பிரகாரம் ஒரு நல்ல மருமகள் நாளைக்கு வந்து சேர்ந்திட்டா, முன்னை மாதிரி மறுபடியும் இந்த வீடு விளக்கெரிஞ்சு, சீரும் சிறப்புமாய் விளங்கக் குறியா பார்க்க வேணும்? என்ருர் நல்லதம்பி,