பக்கம்:காணி நிலம் வேண்டும்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

92

எடுத்துக்கிட்டுப் பாக்கியைத் தரணும்,' என்று நிறுத்தினர். - -

. நல்லதம்பி பணத்தை ஒரு தரத்துக்கு இரண்டு தரமாக எண்ணிச் சரி பார்த்து மடியில் வைத்துக் கொண்டபின், ஏறிட்டு விழித்தார். 'நம்பளுக் துள்ளே வட்டிவாசிப் பேச்சு வரலாமுங்களா? அடி நாளிலே ஆபத்துச் சம்பத்துக்கு எனக்கு உதவலிங் களா? புதுப் பணக்காரர் ராமையாத் தேவரிலிருந்து பழைய பணக்காரர் சோவன்ன மான வரைக்கும் யார்தான் உங்ககிட்ட கை நீட்டலேங்க? பத்து ரூபாயை ஞபாகத்தோடு உள்ளே வச்சுக்கங்க!' என்று கூறினர்; தாம்பூலம் தரித்துக் கொண்டு வெளியேறிஞர், கொடுக்கல் வாங்கல் நல்லதம்பி.

முகப்பில் வானுெலிப் பெட்டியைத் திருகிக் கொண்டிருந்தான் வீரமணி.

"வீரமணி, வழித் தடத்திலே ஒரு நல்ல தகவல் காதுக்கு எட்டுச்சு. அதுக்குத் தங்கனே உங்க அப்பாரும் அனுசரணையாய்ப் பேகினங்க. நான் தடைவழியிலே கேள்விப்பட்டது போல, கொள் வினை-கொடுப்பினை நல்லவிதத்தோட கைகூடி, நீங்க உங்க அம்மான் மகள் அன்னக்கொடி கழுத்திலே மூணு முடிச்சுப் போட்டுப் பிட்டால் எவ்வளவோ சிலாக்கியம்தான்!”

வீரமணி வாய் நிரம்ப-மனம் நிரம்பப் புன்னகை புரிந்தான். அவன் முன்னிலையில் கனவின் வட்டம் சுழல ஆரம்பித்தது. கனவுக்கிளி அன்னக் கொடி கனவு காட்டி, அழகு கூட்டி, காலத்தைச்