பக்கம்:காதலர் கண்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1]

காதலர் கண்கள்

3


ம-சோ. ஜெயசிங் !
ம. செயிட்சிங், ஜெயசிங் ஏன் வந்தான் ?
செ. நாடிர்ஷாவைத் தோற்கடித்து, ஹுஜூரிடம் நஜர் உடன் பார்க்க வந்திருக்கிறன் போலிருக்கிறது. இந்தக் கடிதத்தில் அந்தச் சமாசாரந்தா னெழுதி யிருக்கிறது.
ம. அச்சா அச்சா !-ஜூல்பிகர் !
ஜூ. பொஹுத் அச்சா !
ம. சோப்தார், புலாவ் ஜெயசிங்.

சோப்தார்கள் கட்டியங் கூறிக்கொண்டு முன்னே செல்ல ஜெயசிங் வருகிறள்

.
அவன் பின்னல் அநேகம் போர் வீரர்கள் கஜர்கள் கொண்டுவந்து வைக்கின்றனர். அவைகளை மகம்மதுஷா அங்கீகரிக்கிறன் ;

கடைசியாக மதால்சிங் வருகிருன்,


மதா ஷா இன்ஷா ! (முழந் தாளிடுகிருன்.)
ம. அச்சா! அம்கு பஹுத் குவிஹை, ரொம்ப சந்தோஷம் பண்ரா! தும்கு என்னு ஒனும், பூச்சோ. -
மதா. எனக்கா ?-ஏ! -ஷா இன்ஷா, ரொம்ப நாளாக் கேக்கரே... எனக்கு ஒரு கண்ணுலம் பண்ணிடனும் !
ம. கியா கல்லாண், செயிட்சிங் ?
செ. ஷாதி ஷா இன்ஷா,
மதா. தாடியா ? எனக்கு வாளுமையா தாடி.
செ. ஷாதி ! ஷாதி !
ம. ஒ! ஜாதி அச்சா!-ஜுல்பிகர்
ஜூ. பொஹுத் அச்சா !
ம. கல்ரோஜ் படம் வந்துதே, அந்த அஜ்மீர் ராஜா பேடியெ இவன்கு ஷாதி கரோ,
ஜூ. பொஹுத் அச்சா !
செ. இதென்ன இது ?- ஷா இன்ஷா ! இவன் ஜெயசிங் அல்ல, ஜெயசிங்கினுடைய வேலைக்காரன், கவ்கர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/7&oldid=1259243" இலிருந்து மீள்விக்கப்பட்டது