பக்கம்:காதலர் கண்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 காதலர் கண்கள் (அங்கம்-1
ம. பர்வா நை. ஜெயசிங் எங்கே ?-ஜெயசிங், நீ அந்த ராஜ் குமாரி ஷாதி கரோ.
ஜெ. ஷா இன்ஷர் ! நான் கேட்கவில்லையே எனக்கு விவாகம் வேண்டாம்.
ம. கை, கைமை, ஹாகும் தியா, நீ அந்த ராஜா பேடியெ ஷாதி பண் ணுேணும்.
ஜெ. ஷா இன்ஷா, என்னை மன்னிக்கவேண்டும் எனக்கு இப்பொழுது விவாகமே வேண்டாம்.
ம. நான் ஷா இன்ஷா! ஹுக்கும் கொடுக்றேன், நீ கை சொல் ருன்! கபர்தார்! -ஜூல்பிகர் ! ஜெயசிங்கு புலாகர் அஜ்மீர்கு ஜாவ், வஹான் அஜ்மீர் மஹாராஜா பேடிகு இன்கு ஷாதி கரோ ஜல்தி. ஜு. அச்சா ஷா இன்ஷா ! ... " - ஒரு சோப்தார் வருகிருன், சோ. ஹுஜூர் காசா தயார் ! ம. பிஸ்மில்லா !-செயிட்சிங், நீயும் ஜூல்பிகர்கூட ஜாகர், ஷாதி ஜல்தி பண். (சோப்தார்கள் கட்டியம் கூறிக்கொண்டு முன் செல்ல ஜூல்பிகர்கான் முதலான மற்ற மகம்மதியர் பின்வர, மஹம்மதுஷா போகிருன்.) ஜெ. இ.தென்ன இது நாளுவது அஜ்மீர் ராஜகுமாளியை விவாகம் செய்து கொள்வதாவது ? அவர்களுக்கும் எங்களுக்கும் மூன்று தலை முறையாக ஜன்மத்துவேஷம், செயிட்சிங், இவ்விஷயம் நீ அறியாத தன்றே ! - செ. ஆம், ஆம். இந்தத் தர்ம சங்கடத்திற் கென்ன செய்வது? இந்த மூடன் ஒன்றைச் சொல்லிவிட்டால், தப்போ ஒப்போ அதே பிடி வாதம் பிடிப்பான். (மதால்சிங்கைக் காட்டி) இந்த இழவு போய், எனக்குக் கல்யாணம் வேண்டும் ' என்று கேட்க வேண்டுமா ? ஜெ. அவன் கேட்டால் எனக்கு உத்தரவு செய்வானேன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காதலர்_கண்கள்.pdf/8&oldid=1064887" இலிருந்து மீள்விக்கப்பட்டது