பக்கம்:காதலும் கடமையும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலுiம் கடமை யும் } { சரோஜா : நீங்க்ள் கட்டிவைத்திருக்கும் பிரசவ விடுதி அதற்கு ஒரு பெரிய அத்தாட்சியாக விளங்கு கிறதே? அதற்கு எப்பொழுது திறப்பு விழா நடத்தப் போகிறீர்கள்? கேசவன் . சரோஜா, அதைக் கட்டி முடித்து விட்டுத்தான் உன்னைக் கலியாணம் செய்து கொள்ளுவ தென்று நான் தீர்மானித்திருந்தேன். சரோஜா : சரி சரி...நல்ல யோசனை செய்தீர்கள். (வாய்விட்டுச் சிரிக்கிருள்.) கேசவன் . ஏன் சிரிக்கிருய் சரோஜா? சரோஜா : இப்படி வெளியிலே சொல்லாதீர்கள். எல்லோரும் சிரிப்பார்கள். கேசவன் : ஒகோ......அப்படியா? (சிரிக்கிருன்) அதிருக்கட்டும் சரோஜா, மக்களுடைய சேவைக்காகவே நம்முடைய வாழ்க்கை அமையவேணும். அதுதான் என்னுடைய ஆசை. என்னென்ன வகையிலே மிக்க ளுடைய சுகத்திற்காக உதவலாம் என்று நாம் யோசனை செய்து திட்டம் வகுக்கவேணும். சரோஜா : இப்பொழுதே திட்டம் வகுப்பதென் ருல் எனக்குப் பயமாக இருக்கிறது. கேசவன் : ஏன்...? சரோஜா : பிரசவ விடுதித் திட்டம் போட்டதா லேயே .கல்யாணம் செய்துகொள்ளுவதா வேண்டாமா என்று தீர்மானம் செய்ய இரண்டு வருஷம் தள்ளிப் போட்டீர்கள்.