பக்கம்:காதலும் கடமையும்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கர்தலும் கடமையும் சரோஜா : இருந்தாலும் நான் பார்த்துத் தாகை வேணும்-அவரை எழுப்பி நான் வந்திருக்கிறதாகச் சொல்லு. - ராமன் : என்னமாவது உடம்புக்குச் சரியில்லையா அம்மா? - சரோஜா : அதெல்லாம் ந ா ன் டாக்டரிடம் சொல்லிக்கொள்ளுகிறேன். நீ போய் அவரிடம் நான் பார்க்கவேணுமென்று சொல். அவசரம். ராமன் : சரியம்மா. இப்படி நாற்காலியிலே உட் காருங்கள், வெளி விளக்கைப் போட்டு வைக்கட்டுங் களா? இருட்டாக இருக்குது. சரோஜா : ஆமாம், விளக்கைப் போட்டுவிட்டுப் போய் டாக்டரிடம் சொல்லு. சீக்கிரமாகப் போ. (ராமன் மின்சார விளக்கைப் போட்டுவிட்டு நாற் காலி ஒன்றை, சரோஜா அமருவதற்காக எடுத்து வருகிருன். பிறகு கேசவனிடம் கூற உள்ளே செல்லுகிருன். சரோஜா நாற்காலி யில் உட்காராமல் நடமாடிக்கொண்டிருக் கிருள். அவளிடத்திலே ஒரு பரபரப்புக் காண் கிறது. முகத்திலேகவலைகுடிகொண்டிருக்கிறது. சற்று நேரத்தில் ராமன் வெளியேவருகிருன்.) சரோஜா : (ஆவலோடு) ராமா, டாக்டரைப் பார்க்கலாமா? - ராமன் : இல்லையம்மா? இப்பப் பார்க்க முடியா துன்னு சொல்லிவிட்டார். - சரோஜா அவசரமான காரியமென்று சொன்னுயா? ராமன்: ஆமாம்மா-அப்படித்தான் சொன்னேன். உங்களிடத்திலே சொல்ல வேண்டியதை யெல்லாம் முன்னமேயே சொல்லிவிட்டாராம். இனிமேல் பார்க்க வேண்டியதில்லை என்று சொல்லுகிமூர். என்னவோ