பக்கம்:காதலும் கடமையும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 & கர்தலும் கடமையும் காட்டிலும் சந்தோஷமாக இருப்பதாகத்தான் சொல்லு கிருர்கள். நேரிலும் நான் அதைக் கண்டிருக்கிறேன். கேசவன் அவர் மனதிலே எத்தனை வேதனை இருக்குமோ-அது அவர்களுக்கு எப்படித் தெரியப் போகிறது? உனக்குத்தான் எப்படித் தெரிய முடியும்? சரோஜா : நடவடிக்கையிலிருந்து கொஞ்சமாவது உண்மை தெரியாமலா போகும்? கேசவன் . அவர் தமது முதல் மனைவியை இழந்த துக்கத்தை மறப்பதற்காகவே இப்படி வெளித்தோற்றத் திற்குக் குதுரகலமாக நடந்துகொண்டு இருக்கலாம். துக்கத்தை மறக்க அதுவும் ஒரு வழிதானே? சரோஜா : இருந்தாலும் எனக்கு அது இயற்கை யாகத் தோன்றவில்லை. துக்கமிருந்தால் அது ஒரு சமயத் தில் இல்லாவிட்டாலும் மற்ருெரு சமயத்திலே வெளி யாகாமல் போகாது. - கேசவன் . சரோஜா. அதைப்பற்றி ஆராய்ச்சி செய்ய நான் உன்னைக் கூப்பிடவில்லை. சரோஜா (கொஞ்சம் தயங்கி நின்று) : டாக்டர், என் தாயாரைத் தங்களிடம் பேசவிட்டது தவறென்று எனக்கு இப்பொழுது தெளிவாகப் படுகிறது. என்ன மன்னித்துவிடுங்கள்; இனிமேல் இப்படி எதுவும் நேராது. கேசவன் : எனக்கு இனிமேல் நீ இங்கு வேலை செய்வது இஷ்டமில்லை. சரோஜா : அப்படிச் சொல்லாதீர்கள் டாக்டர். என் ம ைம் ஒடிந்துபோவதோடு என் தாயாரின் நிலைமை