பக்கம்:காதலும் கடமையும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்தலும் கடமையும் 43 யும் மறுபடியும் கெட்டுப்போகும். இந்த ஒரு பிழையை மன்னித்துவிடுங்கள், மறுபடியும் இப்படி ஏற்படாது. கேசவன் (யோசனை செய்து) . ம்...பார்க்கலாம். உன் தாயாரின் நிலைமையை எண்ணி இந்த முறை விட்டுக்கொடுக்கிறேன். ஆணுல், இன்றிலிருந்து நீ நமது பிரசவவிடுதிக்குப் போய் அங்கிருந்தே வேலை செய்ய வேணும். இங்கே வேண்டாம். சரோஜா : பிரசவ விடுதியிலா? ...அங்கே வேலை செய்ய நான் பயிற்சி பெறவில்லையே? கேசவன் : இங்கே வரும்போது மட்டும் உனக் கென்ன பயிற்சி இருந்தது? அதைப்போல அங்கேயும் பழகிக்கொள்ளலாம். அங்கே போகச் சம்மதமானுல் இருக்கலாம்...இல்லாவிட்டால்... சரோஜா : சரி டாக்டர், உங்கள் உத்திரவுப்படியே அங்கு வேலை செய்கிறேன். ஆளுல், ஒரு விஷயம் நான் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். கேசவன் : என்ன விஷயம்? - - - .م சரோஜா : அங்கே வேலை செய்யச் சொல்லுவதன் காரணம் என்ன? கேசவன் : உன்னே நான் பார்க்கும் சந்தர்ப்பம் குறையும்; அதுதான் காரணம். சரோஜா ஒ...அதுதான் காரணமா? அப்படி யானுல் சரி டாக்டர், எனக்கும் சம்மதம். கேசவன் : அம்மாளே வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீயும் இன்றைக்கே பிரசவ விடுதிக்குச் செல்லலாம்.