பக்கம்:காதலும் கடமையும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 காதலும் கடமையும் கேசவன் : சரோஜா, நீ அந்த நாகவல்லியிடம் என்ன பேசிய்ை? சரோஜா (திடுக்கிட்டு) ; ஏன் அதைப் பற்றி என்ன இப்போ? நான் பல தடவை அவளோடு என்னென் னவோ பேசியிருக்கிறேன்...எந்த விஷயத்தைப் பற்றிக் கேட்கிறீர்கள்? கேசவன் : நான் கலியாணம் பண்ணிக்காததின் காரணம் எல்லாம் அவளுக்கு எப்படித் தெரிந்தது? - சரோஜா ஒ அதுவா? ஏதோ பேச்சு வாக்கில் அவளிடம் கூறும்படி ஏற்பட்டது. கேசவன் (கடுமையாக) : அதைப் பற்றி வெளியே பேசக்கூடாதென்று நான் சொன்னதுண்டா இல்லையா? சரோஜா : ஆமாம் சொல்லியிருக்கிறீர்கள். கேசவன் : நீ அதை மீறி நடந்திருக்கிருய். இனி மேல் நீ இங்கே வேலை செய்ய முடியாது. சரோஜா : நான் சொன்னதிலே தவருென்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே? கேசவன் : தவறில்லையா? ஏன் தவறில்லை? இந்த விஷயத்தைப் பறையடிக்க உன்னே நான் இங்கு வைத் திருக்கவில்லை. நீ இன்றைக்கே போய் விடலாம். சரோஜா : கலியானம் என்ற பேச்சை மறுபடியும் எந்த வகையிலும் எடுக்கக்கூடாது என்று நீங்கள். கூறினர்கள். நான் அந்த நிபந்தனையை மீறவே இல்லை. இனிமேலும் மீற மாட்டேன். கேசவன் : பின் எதற்காக நாகவல்வியிடம் பழைய விஷயத்தைப் பற்றிப் பேசிய்ை? .