பக்கம்:காதலும் கடமையும்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்தலும் கடமையும் 59 சரோஜா அவள் இந்தக் கலியானத்தை மீண்டும் நடக்கும்படி செய்துவிடுவாளென்று நான் அந்த விஷயத்தைச் சொல்லவில்லை. அவளால் அது ஆகுமென்று நினைக்க நான் அத்தனை முட்டாள் அல்ல. கேசவன் : பிறகு எதற்கு அவளிடம் பேசினய்? சரோஜா : என்னைப் பற்றி ஊரிலே என்னென் னவோ பேசிக் கொள்கிரு.ர்கள். நாகவல்லியாவது உண்மையைத் தெரிந்துகொள்ளட்டும் என்ற ஆசையால் தான் சொன்னேன். கேசவன் : ஊரிலே என்ன பேசுகிரு.ர்கள்? சரோஜா : என்ன பேசுவார்கள்? உங்களுக்கும் எனக்கும் இல்லாத சம்பந்தமெல்லாம் இருப்பதாகப் பேசுகிருர்கள். நான் இங்கே வேலை செய்து கொண் டிருப்பதற்கு அவர்கள் சொல்லுகிற காரணங்கள்தான் அவையெல்லாம். கேசவன் : ஊரார் என்னவாவது பேசிளுல் அதைப் பற்றி நீ ஏன் கவனிக்கிருய்? இந்தமாதிரி வதந்தியை யெல்லாம் எதிர்த்து நிற்கத் தைரியமில்லாமல் நீ இங்கு வேலை செய்ய வந்திருக்கக்கூடாது. சரோஜா : எனக்குத் தைரியம் இல்லாமலில்லைஊர்ப்பேச்சுக்குப் பயந்திருந்தால் நான் இத்தனை நாள் இங்கிருந்திருக்க முடியாது. - கேசவன் : பிறகு எதற்காக நாகவல்லியிடம் அதைச் சொன்னுய்? - சரோஜா : என்மேல் அன்பாக இருக்கிற ஒன் றிரண்டு பேராவது உண்மையைத் தெரிந்து என்னைப் பற்றி நல்லெண்ணம் கொண்டிருக்க வேண்டாமா? நான்