பக்கம்:காதலும் கடமையும்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 காதலும் கடமையும் நாகவல்வி : ஆமாங்க, டாக்டர். அக்காள் இங்கே வந்துவிட்டுப் போனுல் எனக்குக் கொஞ்சம் தைரியமாக இருக்கும். சரோஜா : குழந்தையையும் பார்த்துக் கொண்டு இவரையும் கவனிக்க உன்னலே முடிகிறதா. நாகவல்லி? நாகவல்லி (விசனத்தோடு): இல்லேயக்கா, அதுக்குக் கண் சரியாக இருந்தாலும் எப்படியோ சமாளிக்கலாம்." இப்போ...... கேசவன் . அந்தக் குழந்தையை நம்ம பாலபிருந்தா வனத்திற்கு அனுப்பிவிடு நாகவல்லி...... (சரோஜாவைப் பார்த்து) சரோஜா, நீ அதை எடுத்துக்கொண்டு போய் கவனித்துக் கொள். சரோஜா : நாகவல்லி, டாக்டர் சொல்கிறபடி செய்வதுதான் நல்லது. இல்லாவிட்டால் உனக்குத்தான் கஷ்டம். அவரையும் நன்ருகக் கவனிக்க முடியாது. நாகவல்வி : சிரியக்கா. குழந்தை உங்களிடத்திலே இருந்தால் எனக்கும் கவலேயிருக்காது. ஆனல், உங்களுக் குத்தான் ரொம்பக் கஷ்டமாக இருக்கும். கேசவன் : பாலபிருந்தாவனம் கு ழ ந் ைத க ளே வைத்துக் காப்பாற்றத்தானே இருக்கிறது? சரோஜா (நாகவல்லியைப் பார்த்து) : எனக்கு ஒரு கஷ்டமும் இருக்காது. எனக்குச் சந்தோஷமாகவே இருக்கும். நீயும் இஷ்டப்பட்டபோது வந்து குழந்தை யைப் பார்த்துக் கொள்ளலாம். கேசவன் . சரோஜா, இன்றைக்கே குழந்தையைப் பாலபிருந்தாவனத்திற்கு எடுத்துக் கொண்டு போய்விடு.