பக்கம்:காதலும் கடமையும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதலும் கடன்மயும் శః கேசவன் : சரோஜா, இதையெல்லாம் பேசி என்ன லாபம்...... இப்போ நீ எதற்காக வந்தாயோ அதைச் சொல்லிவிட்டுப் போ. வீஞ்க மனதைக் குழப்பிக் கொள்ளவேண்டாம். சரோஜா : ராஜுவைச் சென்னைக்கு அழைத்துக் கொண்டு போய் ஒரு மன மருத்துவரிடம் காட்ட வேணும். அவருடைய மனத்திலுள்ள போராட்டத்தை எப்படியாவது அகற்ற வேணும். அப்பொழுதுதான் அவருக்குக் குணம் ஏற்படும். கேசவன் : சரி, உன் இஷ்டப்படியே செய்து பார்ப் போம். இன்றைக்கு இரவு ரயிலிலேயே புறப்படலாம். நானும் வந்து எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு வருகிறேன். ராஜுவையும், நாகவல்லியையும் புறப்படு வதற்குத் தயாராக இருக்கும்படி இப்பொழுதே போய்ச் சொல்வி ஏற்பாடு செய். சரோஜா : மனமருத்துவ சிகிச்சை என்ருல் கொஞ்சம் நாளாகுமல்லவா? சென்னையிலேயே தங்க வேண்டியிருக்கும். கேசவன் : ஆமாம், தனியாக ஒரு வீடு அமர்த்திக் கொண்டு அங்கேயே இருக்கலாம். தாகவல்லிக்குத் துணை யாக நீயும் அங்கேயே இருக்கவேனும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை நான் கவனித்துக்கொள்கிறேன். சரோஜா : நான் அங்கே இருப்பதா? அப்போ பால பிருந்தாவனத்தில் மேற்பார்வைக்கு யாரும் இல்லையே? கேசவன் : அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கூட இருக்காவிட்டால் நாகவல்லி கஷ்டப்படுவாள். அவள் ஒன்றுமே அறியாதவள்.