பக்கம்:காதலும் கடமையும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 காதலும் கடமையும் கேசவன் : நான்தான் உனக்குப் பெரிய தவறு செய்துவிட்டேன். சரோஜா, நீ நினைத்தது உண்மை எனக்குத்தான் தெரியவில்லை. சரோஜா (திகைத்துப் போய்) : டாக்டர், நீங்கள் சொல்வது எனக்கு...புரியவில்லையே? கேசவன்: நீ சொன்னது இத்தனை நாளும் எனக்கு புரியவில்லை...... நீ சொன்னதுதான் சரி. நீ அந்தச் கடிதத்தைப் பார்த்தாயா? . சரோஜா : ராஜு எழுதிய கடிதத்தையா? அதை உங்களுக்குத்தான் எழுதி இருக்கிரு.ர். - . கேசவன் : அதில் எல்லாம் விளக்கமாக இருக்கிறது அதை ராஜு எப்பொழுது எழுதினர்? . சரோஜா : நான் சென்னையிலிருந்து ரயிலுக்குட் புறப்படும்போது எழுதி என்னிடம் கொடுத்தார். கேசவன் : ராஜூவுக்குப் பயித்தியம் பிடித்ததற்குக் காரணம் இப்பொழுது விளங்கிவிட்டது. நீ நினைத்தது சரி, சரோஜா. - சரோஜா : கடிதத்திலே என்ன எழுதியிருக்கிருர்: கேசவன் : என்ன எழுதுவார்? நடந்த விஷயத்தை அப்படியே எழுதியிருக்கிருர்-இதோ படித்துப் பார். சரோஜா (இன்னும் சந்தேகத்தோடு): நீங்களே வேண்டுமானுல் படியுங்கள் டாக்டர். - கேசவன் : ஒகோ என்னுடைய கடிதத்தை நீ படிக்கமாட்டாயா? சரி-நானே படிக்கிறேன். - (கடிதத்தை அவசரமாகப் பிரித்து வேகமாகப் படிக் கிருன்..! அன்புள்ள டாக்டருக்கு, உலகத்தை ஏமாற்றி லுைம் கடவுளே ஏமாற்ற முடியாது என்று எனக்கு