பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 காதலும் கல்யாணமும்

LDறுநாள் ஞாயிற்றுக்கிழமை திட்டத்தின்படி அவன் தூங்கிக் கொண்டிருந்தபோது-அதாவது காபி, பத்திரிகை, சாப்பாடு ஆகியவற்றையெல்லாம் அன்றைய தூக்கத்துக் காகத் தியாகம் செய்துவிட்டு அவன் தூங்கிக் கொண்டிருந்த போது, ஒர் இனிய கனவு-அந்தக் கனவிலே அவனுடைய ‘லட்சிய மனைவி தோன்றி, அவனை மெல்லத் தொட்டு விட்டுச் சிரித்தாள்; அந்த ‘வெள்ளிமணிச் சிரிப்'பிலே கொள்ளை இன்பம் கண்ட அவன் துள்ளி எழுந்து உட்கார்ந்தான். தலையில் குதிரைவால் கொண்டை; அந்தக் கொண்டையைச் சுற்றிப் பிளாஸ்டிக் பூ வளையம்; நெற்றியில் ஆட்டோமாடிக் சிக்னலை நினைவூட்டும் மூவர்ணப் பொட்டு, கண்ணில் ‘நானோக்குங் காலை நிலம் நோக்காமலிருப்பதற்காகக் கறுப்புக் கண்ணாடி, காதில், ரயிலில் நிற்கும் பிரயாணிகளின் கைப்பிடிகளைப் போன்ற இரண்டு வளையங்கள்; உதட்டில் அபாய அறிவிப்பு நிறத்தை ஒத்த “லிப்-ஸ்டிக்; கழுத்தில் எது எடுத்தாலும் ஆறணா முத்து வடம், அழகை அவலட்சணமாக எடுத்துக் காட்டும் நைலான் சேலை-ஆகா, லட்சிய மனைவி என்றால் இவள் அல்லவா என் லட்சிய மனைவி’ என்ற வியப்புடன் அவன் அவளுடைய கைகளைப் பற்றியபோது, ‘தயவு செய்து என்னைத் தொடாதீர்கள்!’ என்றாள் அவள் கொஞ்சம் விலகி நின்று.

‘ஏன் அன்பே, ஏன்?” என்றான் அவன், பதட்டத்துடன்.

‘பவுடர் கலைந்து போகும்’

‘பவுடரர, கையிலா!’

‘இதில் என்ன ஆச்சரியம், என் உடம்பில் பவுடர் இல்லாத இடமே கிடையாதே’

‘ஒ, இ, t'’

‘உங்களுக்குத் தெரியாதா, சினிமா நடிகைகள் எல்லாம் அப்படித்தான் பூசிக் கொள்வார்களாம்; பட்டுப்போல் மேனி பளபளக்கும் அந்த ரகசியத்தை என் சிநேகிதி ஒருத்தி என்னிடம் சொன்னாள். அன்றிலிருந்து நானும்.'