பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 காதலும் கல்யாணமும்

‘தற்குறியாவது, அவன் எம்.ஏ. பட்டதாரி, சார்! சர்க்கார் வேலையில் இருக்கிறான்; நல்ல சம்பளம். தனக்குப் போக மிஞ்சியதையெல்லாம் ஊருக்கு அழுதுவிட்டு, எப்பொழுது பார்த்தாலும் உலகம், உலகம்’ என்று உளறிக் கொண்டிருக்கிறான்! தனக்கென்று ஒரு கல்யாணமில்லை; தனக்கென்று ஒரு வீடு வாசல் இல்லை. கேட்டால், “எத்தனையோ பேர் இந்த உலகத்தில் கல்யாணம் செய்துகொள்ள வசதியில்லாமல் இருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் கல்யாணம்?’ என்கிறான்; எத்தனையோ பேர் இந்த உலகத்தில் வீடு வாசல் இல்லாமலிருக்கும்போது எனக்கு மட்டும் ஏன் வீடு வாசல் என்கிறான்’

‘அப்படிப்பட்டவன் நடைபாதையில் இருக்க வேண்டும்; இங்கே வந்து நம்முடைய கழுத்தை அறுப்பானேன்?”

‘அதை எப்படி அவனிடம் சொல்வது என்றுதானே எனக்குத் தெரியவில்லை; சொன்னால் அடித்துவிடுவானோ என்று பயமாயிருக்கிறது”

‘போலீசாரின் உதவியை நாடுவதுதானே?” ‘அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்கிறார்களே, அவர்கள்?”

‘சம்பந்தப்படுத்த வேண்டும், நாம்!” ‘அந்தக் காரியத்தை நீங்களே செய்துவிட்டால் எனக்கும் நல்லது; உங்களுக்கும் நல்லது’

‘ஆகட்டும், செய்கிறேன்!’ என்று சொல்லிவிட்டு, அவன் ஏதோ எண்ணித் துணிந்தவனாக அங்கிருந்து நகர்ந்தான்; ‘'மறந்துவிடாதீர்கள்!’ என்று மறுபடியும் அதை அவனுக்கு நினைவூட்டிவிட்டுத் திரும்பினார் சர்மாஜி.