பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 117

‘ஏன் முடியாது? அவளுக்குத் தெரிந்து என்னுடன் பழக உங்களுக்குப் பயமாயிருக்கிறதென்றுச் சொல்லுங்கள்’

‘உனக்குத் தெரியாது, அவள் சமாச்சாரம் இன்று காலையில் அவள் என்னிடம் என்ன சொல்லிவிட்டு வந்தாள், தெரியுமா? மகாபலிபுரம் போகிறேன்; மாலைதான் வருவேன்’ என்று சொல்லிவிட்டு வந்தாள். இப்போது பார்த் தால் அவள் நம்மைத் தொடர்ந்து இங்கே வந்திருக்கிறாள்’ இதைக் கேட்டதும், அந்த நிலையிலும் அருணாவுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.இப்படியும் ஓர் அண்ணா இருப்பானா, தனக்கு? மகாபலிபுரம் போகிறேன் என்று சொல்லிவிட்டு, இவனைத் தொடர்ந்து நான் இங்கே வந்திருக்கிறேனாமே?-என்ன அபூர்வமான கண்டுபிடிப்பு!

அசடு!-அந்த அசடையும் காதலிக்க ஒருத்தி கிடைத்திருக்கிறாளே, அதைச் சொல்லு

தன்னைப் பொறுத்தவரை அவன் அப்படி இருப்பது ஒரு விதத்தில் நல்லது; அதுவும் இந்தச் சமயத்தில் மிகமிக நல்லது

இப்படி எண்ணி அவள் கொஞ்சம் தைரியம் அடைந்த போது, பாமா சொன்னாள்:

‘அப்படியேதான் வந்திருக்கட்டும்; அவளுக்காக இப்படி நாம் எத்தனை நாட்கள் பதுங்கிப் பதுங்கி வாழ்வது?”

டிோகன் சொன்னான்: ‘எல்லாம் கல்யாணம் ஆகும் வரையில்தானே? அதற்குப் பிறகு நம்மை யார் என்ன செய்ய முடியும்?”

‘அதுதான் கூடாது என்கிறார்கள், எங்கள் மீனாட்சியம்மாள் இந்த மாதிரி காதல் விவகாரங்கள் எல்லாம் கல்யாணம் ஆன பிறகு நாலு பேருக்குத் தெரிவதைவிட, கல்யாணம் ஆவதற்கு முன்னாலேயே தெரிவதுதான் நல்லது என்று அவர்கள் சொல்கிறார்கள்’

‘ஆண் வர்க்கத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கைபோல் இருக்கிறது, அவர்களுக்கு-ஆனாலும் நான் சொல்வதையும்