பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 காதலும்கல்யாணமும்

பின்னால் ஏறிக் கொள்ளச் சொல்லப் போகிறீர்களா, என்ன?’ என்றாள் அவள், அவனை ஏறிட்டுப் பார்த்து.

“ஏன் பயமாயிருக்கிறதா?” என்றான் அவனும் அவளை ஏறிட்டுப் பார்த்து.

‘பயமாவது நீங்கள் பின்னால் ஏறிக்கொள்ளுங்கள்; நான் முன்னால் உட்கார்ந்து ஒட்டுகிறேன்’ என்றாள் அவள் அவ்வளவுதான் அவன் குதிகுதியென்று குதித்தபடி, “என் ஆசையும் அதுதான் வா அன்பே, வா’ என்று மறுபடியும் அவள் கையைப் பிடிக்கப் போய், மறுபடியும் அவள் எச்சரிப்பதற்கு முன்னால் மறந்து விட்டேன்’ என்று கொஞ்சம் பின் வாங்கி, ஸ்கூட்டரை அவளிடம் ஒப்படைத்துவிட்டு அவளுக்குப் பின்னால் ஏறிப் போனான் இப்படிப்பட்ட சமயத்தில், ‘ஏண்டாப்பா, மோகன் மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகிவிட்டதேடா, எழுந்து

சாப்பிடேன்’ என்று அவனை அவன் அம்மா வந்து எழுப்பினால் எப்படியிருக்கும், அவனுக்கு?-'போம்மா! நல்ல சமயம் பார்த்தாய், என்னை எழுப்பl’ என்றான் எரிச்சலுடன்.

‘ஏண்டா, அப்படி எரிந்து விழுகிறாய்? காலையில் காபி கூடச் சாப்பிடாமல் தூங்குகிறாயே என்றுதானே எழுப்பினேன்?” என்றாள் அவள், ஒன்றும் புரியாமல்.

‘எனக்குக் காபியும் வேண்டாம், சாப்பாடும் வேண்டாம்; தூங்க விடு, போதும்’ என்று மறுபடியும் கவிழ்ந்து படுத்துக் கொண்டு தூங்க முயன்றான் அவன். ஒருவேளை அந்தக் கனவு மீண்டும் தொடர்ந்தாலும் தொடரலாம் என்ற நம்பிக்கையில்

ஆனால் அவன் எதிர்பார்த்தபடி தூக்கமும் தொடர வில்லை; கனவும் தொடரவில்லை-அவற்றுக்குப் பதிலாக அம்மாவைத் தொடர்ந்து அவனுடைய நண்பன் மணி வந்து, வழக்கம்போல் அவனுடைய முதுகில் ஒரு குத்துக் குத்தினான். அந்தக் குத்திலிருந்தே வந்திருப்பவன் மணி