பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 காதலும் கல்யாணமும்

நீ கேட்கத்தான் வேண்டும்; அவர்கள் நினைப்பதுபோல் நமது சமூகம் இன்னும் அந்த அளவுக்கு முன்னேறவில்லை’

‘சமூகம், சமூகம் என்கிறீர்களே, சமூகம் என்று ஒன்று தனியாக இருக்கிறதா, என்ன? நீங்களும் நானும் சேர்ந்ததுதானே சமூகம்? அந்தச் சமூகத்தோடு ஒட்டாமல் நாம் எடுத்ததற்கெல்லாம் பிரிந்து நின்று, அது இன்னும் அந்த அளவுக்கு முன்னேறவில்லை, அது இன்னும் அந்த அளவுக்கு முன்னேறவில்லை’ என்று சொல்லிக்கொண்டு இருந்தால், அது என்றுதான் அந்த அளவுக்கு முன்னேறுவது? நீங்கள் பேசாமல் இருங்கள்; நானே உங்கள் தங்கையைக் கூப்பிடுகிறேன்-அருணா, அருணா!’

மோகன் பதறிப் பாய்ந்து அவள் வாயைப் பொத்துவதற்குள், பாமா அவளைக் கூப்பிட்டே விட்டாள்; அவளும் அதுதான் சமயமென்று அமைதியே உருவாய் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றுவிட்டாள்

அசட்டு அண்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை: அத்தனை அமைதி தன் தங்கையிடம் திடீரென்று எப்படித் தோன்றிற்று?’ என்று எண்ணிக் குழம்பியவனாய், அவன் அவளையே ஒரு கணம் மேலுங் கீழுமாகப் பார்த்தான். மறுகணம் தன்னை மறந்து, ‘என்ன அருணா, என்ன உடம்புக்கு ‘ என்று அவளை மெல்ல விசாரித்தான்.

‘ஒன்றுமில்லை; உலகம் இன்றுதான் புரிந்தது, எனக்கு’ என்றாள் அவள், எங்கோ பார்த்து நிலைத்த கண் நிலைத்தபடி.

‘எதைச் சொல்கிறாய்? மணியைப் பார்க்கப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் படம் பார்க்க வந்திருக்கிறேனே, அதைச் சொல்கிறாயா?”

‘இல்லை, மகாபலிபுரம் போகிறேன் என்று சொல்லி விட்டு இங்கே வந்து நிற்கிறேனே, அதைச் சொல்கிறேன்”

அவன் சொன்னது அவளுக்குப் புரியவில்ல; அவள் சொன்னதும் அவனுக்குப் புரியவில்லை!-ஆயினும், ஏதோ