பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 119

புரிந்துவிட்டதுபோல அவர்கள் இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக்கொண்டார்கள்

“ஆமாம், உள்ளே உட்கார்ந்திருந்த நீ ஏன் திடீரென்று எழுந்து வெளியே வந்தாய்?” என்று அருணாவைக் கேட்டாள்

Liss LDIT.

‘உங்களுக்குப் பயந்துதான்!” என்றாள் அவள். ‘'அட, கடவுளே! இவரும் உனக்குப் பயந்துதான் என்னை இழுத்துக்கொண்டு வெளியே வந்தார்!”

‘இனிமேல் யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம்; வாருங்கள், உள்ளே போவோம்’ என்று அவர்களை அழைத்துக்கொண்டு அருணா உள்ளே சென்றாள்.

திரை விலகிற்று-தியேட்டரின் திரை மட்டும் அல்ல; அவர்கள் மூவருடைய மனத்திரையும்தான்

காட்சி ஆரம்பமாயிற்று-வாழ்க்கையில் L  ! வஞ்சிப்பதற்கு உதவும் காதல், திரையிலும் அல்லவா லட்சோப லட்சம் மக்களை வஞ்சிப்பதற்கு உதவுகிறது

அவர்களில் ஒருத்தியாகத் தானும் அங்கே உட்கார்ந்திருப்பதை உணர்ந்தபோது, அருணாவுக்கு ஏனோ சுந்தரைப் பற்றிய நினைவு வந்தது.

அவன் இப்போது எங்கே இருப்பான்? வாசலில் நின்று கொண்டிருப்பானா? அல்லது, மேலே வந்திருப்பானா?

மேலே வந்திருந்தால் தனியாக வந்திருப்பானா? அல்லது, தன் நண்பர்களுடன் வந்திருப்பானா?

அவன் எப்படி வந்திருந்தால் என்ன? அவனைப் பற்றித் தன் மனம் ஏன் இன்னும் நினைக்க வேண்டும்?-நினைக்கத் தெரிந்த மனத்துக்கு மறக்கத் தெரியாதா?

இப்படியெல்லாம் எண்ணி அவள் மேலும் மேலும் குழம்பிக்கொண்டு இருந்தபோது, இடைவேளை மணி கிணுகினுத்தது; அணைக்கப்பட்டு இருந்த விளக்குகள் அத்தனையும் மறுபடியும் குபிரென்று எரிந்தன.