பக்கம்:காதலும் கல்யாணமும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 121

வாழ்க்கையென்றால் பொறுப்புணர்ச்சி மிக்கதாயிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது அல்லவா? அந்தப் பொறுப்புணர்ச்சியெல்லாம் அவரிடம் கிடையாதுகண்டதேக் காட்சி; கொண்டதேக் கோலம். அதுதான் அவருடைய வாழ்க்கை-அத்தகைய வாழ்க்கைக்கு அடிப்படையாயிருந்தது சர்வ வல்லமையுள்ள பணம்’

ஆம், ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரிகளில் குறிப்பிடத்தக்க ஒருவராயிருந்து வந்த அவருக்குச் சென்னை மாநகரில் மட்டும் நாலைந்து குடும்பங்கள் இருந்தன. நாலைந்து குடும்பங்கள் என்றால் நாலைந்து துணைவிமார் கள் என்று அர்த்தம். இந்தத் துணைவிமார்களைத் தவிர, ‘மனைவி என்று ஒருத்தியும் அவருக்கு உண்டு. சாத்திரத்துக்காகவும், சம்பிரதாயத்துக்காகவும்!-இவர்களைத் தவிர கல்கத்தா, பம்பாய், டெல்லி போன்ற நகரங்களிலும் அவருக்கு ஆசை நாயகிகள் பலர் இருப்பதாகக் கேள்வி

போதும் போதாததற்கு அவற்றிலும் ஒரு மாறுதல் வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம், அவர் அதற்கென்றே அயல்நாடுகளுக்கும் போய்விடுவாராம்; அங்கெல்லாம் அவருக்கு வியாபாரத் தொடர்பு உண்டோ இல்லையோ, அந்தத் தொடர்பு மட்டும் உண்டு என்று அவருடன் நெருங்கிப் பழகும் அவரைப் போன்ற பெரிய மனிதர்கள் சொல்கிறார்கள்!

சொல்கிறார்கள் என்றால், அவருடைய பெருமைக்கு அதை ஓர் இழுக்காகக் கருதிச் சொல்லவில்லை; சிறப்பாகக் கருதியே சொல்கிறார்கள்

அத்தகைய பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகளில் ஒருவனாகப் பிறந்துவிட்ட சுந்தருக்குத் தன் அப்பாவைப் போலவே தானும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்காதா?-இருந்தது; ஆனால் அதற்கு வேண்டிய பணம்தான் அவன் பொறுப்பில் இல்லை!

அதை நினைக்கும் போதெல்லாம் ஆத்திரம் ஆத்திரமாக வரும் அவனுக்கு. அப்பா நினைத்தால் ஒரு பெண்ணைப்